search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி
    X

    அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    • மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முயற்சியோடு தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐந்தாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் நவமணி அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் ஆசிரியர் சசிரேகா தொகுப்புரை வழங்கினார். பி.எஸ். பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செல்வம் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முயற்சியோடு தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சீனிவாசன், கலைவாணி, சுப்பிரமணியன், மாதவி, இந்திரா, பிரியதர்ஷினி, சுகந்தி, சவுமியா, சுகன்யா, அருணா, கலையரசி, கிருஷ்ணகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×