என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை படத்தில் காணலாம்.
ஆண்டிபட்டி அருகே பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி
- பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
- சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் ஊராட்சியில் கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்று க்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்து பாழடைந்த நிலையில் இரு ப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் விசேஷ நாட்களில் விசேஷங்கள் நடைபெறும் பொழுது பள்ளி மாணவர்களும் விசேஷ வீட்டாரும் ஒரே இடத்தில் அமரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கரிசல் பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடத்தை உடனடியாக பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சமுதாய கூடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தை சொந்த கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றித்தரும்படி மாணவ ர்களின் பெற்றோர்களும் கரிசல்பட்டி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






