search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers"

    • ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.

    இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த

    200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    • நெல்லை மாவட்ட ஆசிரியர்களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • பயிற்சியில் சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமன்றம் மற்றும் டெல்லி தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் இணைந்து நெல்லை மாவட்ட ஆசிரியர் களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோல்டன் எபநேசர் ஜெபமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சவுந்திரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின் மற்றும் துணை முதல்வர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாம் குறித்து விளக்கினர். இப்பயிற்சி முகாமை கல்லூரியின் விலங்கியல் துறைத்தலைவர் ஜெயபிரபா ஒருங்கிணைந்து நடத்தினார்.

    இப்பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வேதியியல்துறை உதவி பேராசிரியை ஷகினா நன்றி கூறினார். மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், 2 நாட்கள் பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.

    • ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர்.
    • கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தச்சநல்லூர் கரையிருப்பு அய்யாசாமி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாணவன் மீது தாக்குதல்

    எனது குழந்தைகள் தச்சநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தை களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும், தேர்வில் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டியும் வருகின்றனர்.

    கடந்த 8-ந்தேதி எனது மகனை அந்த பள்ளி ஆசிரியர் புத்தகத்தை கொண்டு தாக்கியதில் அவனது காதில் வலி ஏற்பட்டு காயம் இருந்து வருகிறது. இது தொடர்பாக எனது மகன் எங்களிடம் வந்து தெரிவித்த போது நாங்கள் தட்டி கேட்கின்றோம் என்றோம்.

    அப்போது அவன், தட்டிக் கேட்டால் ஆசிரியர்கள் பெயில் ஆக்கி விடுவார்கள் என்று மிரட்டியதாக தெரிவித்தான். விசாரித்து பார்த்ததில் அந்த பள்ளியில் ஏராள மான மாணவர்களை ஆசிரியர்கள் இதுபோன்று நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறி இருந்தனர்.

    மணல் திருட்டு

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற ங்களுக்கு உட்பட்ட கிராம ங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை. இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    ஆனால் இங்கு சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பச்சையாற்றின் படுகையில் மணல் திருட்டு தாராளமாக நடைபெறுகிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    • பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

    மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.

    தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.

    பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
    • மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவா டானை பஞ்சாயத்து யூனி யன் மேற்கு தொடக்கப் பள்ளியானது தூய்மைக்கான மாநில அரசின் விருது பெற்ற பள்ளியாகும். இந்த பள்ளியின் தலைமையாசி ரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    இந்த நிலையில் இப் பள்ளியில் எண்ணும், எழுத்தும், காலை உணவு திட்டம் போன்ற கல்வி சம்பந்தமான அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு தயாராக உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 250 மாணவ-, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற் போது 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ள னர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமமடைந்துள்ளனர்.

    தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வசதியில்லாத மாணவ-மாணவிகள் அரசு பள்ளியை நம்பி வருகின்ற னர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை யால் முழுமையாக கல்வியை பெற முடி யவில்லை. ஆனால் அதிகாரி கள் இதுகுறித்து பாராமுக மாக இருப்பதாக கூறப்படு கிறது.

    காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவ தில் அக்கறையுடன் செயல் படவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி குறித்த அறிக்கைகளை மாதந்தோறும் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதில் கூறப்பட்டுள்ள குறைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மாணவ-மாணவகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    சுவாமிமலை:

    பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவிடைமருதூர் வட்டார கிளை சார்பில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டாக்டர். லாடமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜன், சங்க ஆலோசகர் மறைமணி, வட்டார பொருளாளர் சுரேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    விழுப்புரம்:

    வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

    • ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
    • குருவையும், தாய், தந்தையரையும் போற்றும் குருகுலக் கல்வி மீண்டும் வர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா், ராயபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உ.சி., விருப்பாச்சி கோபால் நாயக்கா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் ஆசிரியா்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.குருவையும், தாய், தந்தையரையும் போற்றும் குருகுலக் கல்வி மீண்டும் வர வேண்டும். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

    சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உ.சிதம்பரனாா், விருப்பாச்சி கோபால் நாயக்கா் ஆகியோரின் வரலாற்றைப் பள்ளி மாணவா்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மத்திய அரசு, மாநில ஆளுநருக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் மனு அனுப்பும் போராட்டம் நாளை 7-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என்றாா்.

    இந்த சந்திப்பின்போது இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

    • 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம்
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    கடலூர்:

    தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வே ண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவ ர்களைக் கொண்டு ஆசிரி யர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும், தொடக்கக்கல்வி மாணவ ர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும், எமிஸ் இணையதளத்தில் தேவை யற்ற பதிவுகளை மே ற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது, காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும், காலை உணவுத் திட்டப் பணியிலி ருந்து தலைமை ஆசிரியர்க ளையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிக ளையும் சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்க வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடந்த து. இந்த ஆர்ப்பாட்டம் பண்ரு ட்டி வட்டார கல்வி அலுவல கம் முன்பு நகர தலைவர் கீதா தலைமையில், ஏழும லை, சாந்தகுமார், முன்னி லையில் நடைபெற்றது. தொடர்ந்து நகர செயலாளர் உமா வரவேற்று பேசினார். வட்டாரச் செயலாளர் சாந்தகுமார் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைசெயலாளர் நாராயணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் வட்டாரப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார். 

    • ஊராட்சி பகுதிகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

    அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாபட்டி அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் கோவி லாங்குளம் ஊராட்சிக் குட்பட்ட கருகப்பிள்ளை அரசு பள்ளியில் தலைவர் ஜெயந்தி முத்துராமன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தை களுக்கு உணவு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, ராமர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன் தொடங்கி வைத்தார்.இதில் துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உஷாதேவி, ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்வதற்காக தன்னார்வலர்களாக வந்த மூன்று பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    ஆ.கொக்குளம் ஊராட்சியில் தலைவர் நர்மதா கபி.காசிமாயன், கருமாத்தூர் ஊராட்சியில் தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், கிண்ணிமங்கலம் ஊராட்சியில் தலைவர் மயில்முருகன், கொ.புளியங்குளம் ஊராட்சியில் தலைவர் சிவகாமி தர்மர், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தி, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைவர் ஜெயபிரபு, கொடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் உமாதேவி திருக்குமரன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
    • மாணவர்கள் 3 பேரும் செல்போன் பயன்படுத்தியதாகவும் அதனாலேயே ஆசிரியர்கள் திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    பாளை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலை ப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    அப்போது அவர்களிடம் அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விசாரித்ததில், தங்களை ஆசிரியர்கள் தாக்கியதாக கூறினர்.இது தொடர்பாக பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்வில் தோல்வியடைந்ததால் ஆசிரியர்கள் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேரும் கூறினர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் கூறுகையில், மாணவர்கள் 3 பேரும் பள்ளி விதிகளை மீறி செல்போன் பயன் படுத்தியதாகவும், வீடி யோக்கள் பதிவிட்டதாகவும், அதன் காரணத்தினாலேயே ஆசிரியர்கள் அந்த மாணவர்களை திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இரு தரப்பினரும் கூறும் தகவல்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.
    • தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 173-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.

    அவரின் குழந்தைகள் இந்த அரசு பள்ளியில் படிக்காத நிலையில் அவர் அரசியல் கட்சியில் உள்ளதால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது தெரிய வந்தது.

    எனவே அவரை மாற்றி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு இன்று காலை திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவர்களும் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பெற்றோர், ஆசிரியர் கழக தலைவரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பள்ளி விடுமுறை என பெற்றோர்கள் தெரிவித்த நிலையில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×