search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிப்பு
    X

    ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிப்பு

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
    • மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவா டானை பஞ்சாயத்து யூனி யன் மேற்கு தொடக்கப் பள்ளியானது தூய்மைக்கான மாநில அரசின் விருது பெற்ற பள்ளியாகும். இந்த பள்ளியின் தலைமையாசி ரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    இந்த நிலையில் இப் பள்ளியில் எண்ணும், எழுத்தும், காலை உணவு திட்டம் போன்ற கல்வி சம்பந்தமான அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு தயாராக உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 250 மாணவ-, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற் போது 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ள னர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமமடைந்துள்ளனர்.

    தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வசதியில்லாத மாணவ-மாணவிகள் அரசு பள்ளியை நம்பி வருகின்ற னர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை யால் முழுமையாக கல்வியை பெற முடி யவில்லை. ஆனால் அதிகாரி கள் இதுகுறித்து பாராமுக மாக இருப்பதாக கூறப்படு கிறது.

    காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவ தில் அக்கறையுடன் செயல் படவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி குறித்த அறிக்கைகளை மாதந்தோறும் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதில் கூறப்பட்டுள்ள குறைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மாணவ-மாணவகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×