search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac shop"

    • விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும்.

    அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

    • மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூ டங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும். அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது.

    விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    • நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

    இந்த மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், 'மதுபான விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனாலும் இது நடைமுறைக்கு இன்னும் வரவில்ல.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் உள்ளதா? என்பதை உதவி சொலி சிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்தனர்.

    இதுபற்றி அக்டோபர் 23-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் வகையில், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அனேகமாக மதியம் 2 மணியில் இருந்து 10 மணி வரை கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான சாதக, பாதகங்களை அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.

    • பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
    • டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது. மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இங்கு பயிலும் மாணவி இந்த வாசல் வழியே பள்ளி முடிந்து சென்றபோது மதுபோதையில் 4 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். அந்த மாணவி கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு செல்லும்வரை அந்த வாலிபர்கள் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளனர். தினமும் பள்ளி முடியும் வேளையில் மாணவிகளிடம் பேசுவதற்காக சில ஆசாமிகள் காத்திருப்பதும், மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதும் வாடிக்கையாகி உள்ளது.

    இந்த பிரச்சினை அதிகமானதால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழுவில் உள்ள அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே பள்ளியின் பின்பக்க கேட் மூடப்பட்டு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு பின்னால் ஒரு நூலகம் உள்ளது. டாஸ்மாக் கடை இயங்குவதால் பள்ளி நேரத்தில் கூட நூலகத்தில் மாணவிகள் உட்கார முடியவில்லை என்றார். பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார். இதுபற்றி ராயபுரம் எம்.எல்.ஏ. ஆர்.மூர்த்தி கூறுகையில், மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றார்.

    • மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும்.
    • ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் குழுவின் கமிஷனர் தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, "மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மது பாட்டில்களில் விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் போன்றவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவித்து கண்காணிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மத்திய அரசு வக்கீல்கள் குழு ஆய்வு செய்து, 23-ந் தேதி (அதாவது நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் குழுவின் கமிஷனர் தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதனை தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விலை விவரப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

    • டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி செய்த தலைமறைவான குற்றவாளியை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, நரிக்குடி அருகே வீரசோ ழன்-மானாசாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த மே மாதம் 27-ந்தேதி நள்ளிரவு கடையில் புகுந்த மர்ம நபர்கள் பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடை பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தை சேர்ந்த குணசேகரன்(வயது22), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த முகமது யூசுப்(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்ற வாளியான சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சிவபாலன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர். இந்த நிலையில் நேற்று அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்தால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கடைத்தெரு மன்னார்குடி பிரிவு சாலை முக்கத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி மதுக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு சார்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தலைமையில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், சுரேஷ், கண்ணன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏசுராஜா, விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்தால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, கடையை அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதுகுறித்து தகவலறிந்த, ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ்குமார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.
    • அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும்.

    சென்னிமலை:

    கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. 'டெட்ராபேக்' என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சென்னிமலை கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் கூட்டாக அமைச்சர் சு.முத்துசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் அரசின் டாஸ்மார்க் கடைகள் மூலமாக விற்கப்படுகிறது. மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.

    பெரும்பாலும் இந்த கண்ணாடி பாட்டில்கள் 180 எம்.எல். அளவுள்ள சிறிய பாட்டிகளாகவே உள்ளன. மது அருந்துவோர் இந்த பாட்டில்களை பயன்படுத்திவிட்டு கண்ட கண்ட இடங்களில் போட்டு விடுகின்றனர்.

    குறிப்பாக பாசனக்கால்வாய் செல்லும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த சிறு பாட்டில்கள் கொட்டி கிடப்பதை காணலாம். அதோடு வேளாண் விளை நிலங்களில் வேலை செய்யும் பலரும் இந்த பாட்டில்களை வயலில் பல்வேறு இடங்களில் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

    இந்த பாட்டில்களை சேகரித்து ஒழுங்கு செய்ய இயலுவதில்லை. எனவே வயல் வேலைகளில் டிராக்டர் உழவு செய்யும் போது கண்ணாடி பாட்டில்கள் உடைந்து வேளாண் பணிகள் ஈடுபடுகின்றவர்களை கால்களை வெட்டி விடுகின்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் நெல் அறுவடையில் அறுவடை எந்திரங்கள் இந்த பாட்டில்களையும் நெல்லோடு சேகரித்து விடுகின்றன. அவை நொறுங்கி போய் அரிசியிலும் கூட கண்ணாடி துகள்கள் கலந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை செய்வதால் பெரும்பாலும் கிராமப் புறத்தில் உள்ள வேளாண் விளை நிலங்களையும், கால்வாய்களையும் கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே அரசு இப்போது மதுபானங்களை அட்டை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றது.

    அட்டை பாட்டில்கள் மக்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அட்டை பாட்டில்களின் மூலமாக மதுபானங்களை அடைத்து விற்பனை செய்தால் தற்போது கண்ணாடி பாட்டில்களினால் ஏற்பட்டு வரும் பெரும் சூழல் கேடு தவிர்க்கப்பட முடியும்.

    எனவே அரசு கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக அட்டை மூலம் செய்யப்பட்ட பாட்டில்களை 'டெட்ராபேக்' பயன்படுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

    • டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
    • மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

    கீழக்கரை

    புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராமநாத புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மது குடிப்போரின் பழக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் பெரியவர்கள், முதியவர்கள் மட்டும் மது அருந்தி வந்த நிலை மாறி, தற்போது இளைஞர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி மது குடிக்க தொடங்கி விட்டனர். டாஸ்மாக்கில் மது கொள்முதல், விற்பனை ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

    டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    100 பொதுக்கூட்டங்கள் நடத்தி மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதன் பின்பும் மது விலக்கு கொண்டு வரவில்லை வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடத்துவோம்.

    தி.மு.க. அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெயர் உரிமை தொகை அல்ல. உதவி தொகை என கூறலாம்.

    பெண்கள் வாக்குகளை பெற நகைக்கடன் தள்ளுபடி, மாதம் 1000 உரிமை தொகை உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சிவ. பாலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக சத்திரக்குடியில் நடந்த கூட்டத்தில் மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

    • டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
    • டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி ஆக்கூர் முக்கூட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

    அதனையடுத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு 2014ன் கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்கூர் டாஸ்மாக் கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- சிவகங்கை பிரதான சாலையில் திரு மணவயல் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி, மாணவிகள் ரோட்டில் செல்லும் பொழுது மது பிரியர்களின் அச்சுறுத்தல் உள்ளது.மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே கோவில் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம்.
    • அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழக வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

    இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

    இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×