என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
- டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி செய்த தலைமறைவான குற்றவாளியை கைது செய்தனர்.
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, நரிக்குடி அருகே வீரசோ ழன்-மானாசாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த மே மாதம் 27-ந்தேதி நள்ளிரவு கடையில் புகுந்த மர்ம நபர்கள் பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடை பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தை சேர்ந்த குணசேகரன்(வயது22), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த முகமது யூசுப்(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்ற வாளியான சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சிவபாலன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர். இந்த நிலையில் நேற்று அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.






