search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac shop"

    • டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
    • குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

    இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

    மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
    • நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தனிப்பிரிவு காவலர் ஹரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை 45 நாட்களுக்குள் உறுதியாக இடமாற்றம் செய்யப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செல்வகுமரன், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன்லோபோ ஆன்மிகம் மற்றும்கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் வினோத் சுப்பையன் ஆழ்வை கிழக்கு மண்டல் துணை தலைவர் பால்வண்ணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, கல்யானகுமார், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தீபத்திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மூடி வைக்கப்பட உள்ளது.

    அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக் கால் புறவழிச்சாலை உள்ள மதுபானக்கடை, மணலூர் பேட்டை சாலையில் உள்ள மதுபான கடைகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக் கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் மூலையாறு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையானர் கண்ணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு செல்வம் என்பவர் கடையை திறக்க வந்தார்.

    அப்போதுமதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் பூட்டு உடைக்கட்டபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து கடைக்குள் சென்று பார்ந்த போது, அங்கிருந்த ரூ.1,000 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு கட்டக்காமன்பட்டியை சேர்ந்த மதுபான கடை மேற்பார்வையாளர் பெரியசாமி தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடை, ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர் மாயாண்டி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ஓட்டலும் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விலை யுயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் வசூல் பணத்தை திருடி சென்றதாக தெரி கிறது. அங்கு கைவரிசை காட்டிய பின்பு அருகில் இருந்த ஓட்டல் கதவை உடைத்து உள்ளே சென்றது.

    அங்கு நிதானமாக குளிர்சாதன பெட்டியில் இருந்த பானங்களை குடித்த மர்மநபர்கள் பின்னர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை-ஓட்டல் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • மதுக்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருகல்பட்டியில் அரசு மதுபான கடை உள்ளது. தற்போது இந்த கடையை மூங்கில்தொழுவு அருகே உள்ள வி.வேலூர் பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில் வி.வேலூர் பகுதியை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலையில் திடீரென ஒன்று திரண்டு இங்கு மதுக்கடை அமைக்க க்கூடாது என்ற கோஷ த்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடுமலை போலீஸ் டி.எ.ஸ்.பி. சுகுமாறன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவித சம்பவம் எதுவும் நடை பெறாமல் இருக்க பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.இதனால் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து போரா ட்டம் நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதற்கு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இது குறித்து வி.வேலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது:- புதிதாக அமைய உள்ள மது க்கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அனைத்து மக்களும் இந்த மதுக்கடை வழியாகத்தான் சென்று வர வேண்டிய இடமாக உள்ளது. இதனால் இங்கு வரும் மதுபிரி யர்களால் எங்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது நாங்கள் நிம்மதி யாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த மது க்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே மதுக்கடையை இப்பகுதியில் அமைக்க கூடாது என்று கூறினர். 

    • பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.
    • சிறிய வகை ‘டின்’களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கம்பெனிகளின் பீர் தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளன.

    தற்போது புதிதாக பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற புதிய தயாரிப்பின் பீர் விற்பனை பீர் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது.

    650 மி.லி முழு பாட்டில் விலை ரூ.200-ம் 325 மி.லி. அரை பாட்டில் விலை ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய வகை 'டின்'களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும். இந்த பீர் சில நாட்களில் மதுக் கடைகளில் விற் பனைக்கு கிடைக்கும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது.
    • டாஸ்மாக் கடை பக்கத்திலேயே ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நெல்லை உடையார் தலைமையில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது. இதன் முன்பு மீனாட்சிபுரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் இந்த கடையை உடனடியாக அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக அந்த கடையை அப்புறப்பத்த வேண்டும்.

    இதன் பக்கத்திலேயே பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இதன் அருகிலேயே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. மேலும் பெருமாள் கோவிலும் இதன் அருகே இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது குடிமகன்கள் சாலைகளில் வீசி செல்லும் மது பாட்டில்கள் காலில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    இது தொடர்பாக பல முறை மனு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை விசாரித்து உடனடியாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    அப்போது தொழிற்சங்க தலைவர் மாயாண்டி, தொழிற்சங்க செயலாளர் நாகராஜன், கார்த்தீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.
    • மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் உடுமலை நகர கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதுடன் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இதனால் இந்த வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் உடுமலை- தளி பிரதான சாலையை ஒட்டியவாறு இந்த சாலையின் நுழைவுப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.அங்கு மது பாட்டில்களை வாங்க வருகின்ற மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சாலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வீதி வழியாக பெண்கள் பகலில் கூட பாதுகாப்புடன் நடந்து செல்ல இயலாத சூழலே உள்ளது. இதனால் அச்சமடையும் பெண்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கி கடன்கள் பெறுவதற்கு கூட முன்வருவதில்லை.இதன் காரணமாக வங்கி சேவைகள் ஏழை எளிய நடுத்தர பெண்களுக்கு கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுவதுடன் வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை உணர்த்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏடிஎம்., மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியது. போதை ஆசாமிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு கல்லை எடுத்து ஏடிஎம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து விட்டனர். அதைத் தொடர்ந்து பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன் பின்பும் கூட கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை. ஏன் சிந்திக்கவும் கூட இல்லை என்றே சொல்லலாம். இதனால் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்ற பெண்கள் மற்றும் வங்கியில் பணி புரியும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

    அதிகாரிகளின் இந்த செயலானது பொதுமக்கள் நலனுக்கு எதிராக உள்ளதால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பசுபதி வீதியில் இயங்கி வருகின்ற டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது.
    • பீர்பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது.

    இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது.

    பொதுமக்கள் மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தால்தான் அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    இந்த வகையில்தான் சமீபத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    2023 மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருந்தது. அதன் பிறகு அரசு எடுத்த கொள்கை முடிவு படி 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    500 மதுக்கடைகளை மூடியதை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்போது என்ன செய்யலாம் என்று அரசு யோசித்து வருகிறது.

    இதனால் சமீபத்தில் நடந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் 500 மதுக்கடை மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என விவாதிக்கப்பட்டுள்ளது.

    அப்போது மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் போது பல்வேறு புகார்கள் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

    அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அது மட்டுமின்றி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

    இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது என்னென்ன சரக்கு எவ்வளவு விலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும்.

    அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

    • மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூ டங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும். அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது.

    விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    ×