search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் 45 நாட்களில் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் - சமாதான கூட்டத்தில் முடிவு
    X

    திருச்செந்தூர் வருவாய் உதவி கலெக்டர் குருசந்திரன் முன்னிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்ற காட்சி.

    தென்திருப்பேரையில் 45 நாட்களில் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் - சமாதான கூட்டத்தில் முடிவு

    • பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
    • நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட போராட்டம் அறிவிக்கபட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் மற்றும் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தனிப்பிரிவு காவலர் ஹரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை 45 நாட்களுக்குள் உறுதியாக இடமாற்றம் செய்யப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செல்வகுமரன், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், திருச்செந்தூர் நகர தலைவர் நவமணிகண்டன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டீபன்லோபோ ஆன்மிகம் மற்றும்கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் வினோத் சுப்பையன் ஆழ்வை கிழக்கு மண்டல் துணை தலைவர் பால்வண்ணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, கல்யானகுமார், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×