search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்"

    • சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணிக்காபுரம் ரோடு, சிவசக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 30). இவருக்கும் பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீரக்குமார், ஜெகதீஸ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே இதனை எதிர்த்து கேட்ட ஜெகதீஸ்வரனை மதுபான பாட்டிலால் பின் மண்டையில் வீரக்குமார் தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 200 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
    • காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டிலை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் எல்லையில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 200 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.55 ஆயிரம். தொடர்ந்து நடத்திய விசாரணையில், நாகை மாவட்டம் பனங்குடி சமத்துவ புரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 48) என்பதும், காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டிலை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து மகாலிங்கத்தை போலீசார் கைது செய்து, மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைத்தை யும் காரைக்கால் மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.21 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.
    • மூடை மூடையா கட்டி திருடி சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொருசுபட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(வயது41) என்பவர் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் அங்கிருந்த பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்தனர்.

    அங்கு கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணமில்லை. இதனால் அதிருப்தியடைந்த திருடர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை மூடை மூடையா கட்டி திருடி சென்றனர். மறுநாள் மதியம் மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தபோது சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணிக்கம் ஒத்தகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன மதுபாட்டில்களின் ரூ.21 ஆயிரம் ஆகும்.

    • பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தினர்.
    • இந்த போராட்டத்தின் இறுதியில் பங்கேற்ற அனை–வ–ரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்த–லின்படி தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியு–றுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை வலியு–றுத்தி கேணிக்கரையில் உள்ள அரசு மதுபானக் கடை முன்பாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துக்கூரி தலைமையில் மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடை–பெற்றது.

    இப்போராட்டத்தில் நகரச் செயலாளர் சக்தி–வேல், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகர், ராம–நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முரளி, மண்டபம் ஒன்றிய செயலா–ளர் சுடர் மற்றும் அக்கட்சி–யினர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தின் இறுதியில் பங்கேற்ற அனை–வ–ரையும் காவல்துறை–யினர் கைது செய்தனர்.

    • புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம்.
    • அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழக வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

    இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

    இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறு வள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    • ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழியை்த தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை.
    • மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

    டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது. திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறியது.

    மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன.
    • அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம், நீதிமன்றம், டி.ஐ.ஜி. அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், உள்ளிட்ட மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. ஆனால் இந்த வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மறைவான பகுதிகளில் அமர்ந்து கஞ்சா, மது அருந்தி வருகின்றனர். அவர்கள் வீசி செல்லும் மதுபாட்டில்கள் அந்த பகுதியில் சிதறி கிடக்கின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மதுபாட்டில்கள் சிதறி கிடப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக விரோதிகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா சேந்தமங்கலம்பாதூர், திருநாவலூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது சேந்தமகலத்தில் ஒரு வீட்டிற்கு பின்னால் லலிதா (வயது 47) என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்தார்.

    இதேபோல பாதூரில் பாக்கியலட்சுமி (39), என்பவரும், திருநாவலூரில் மங்கவரத்தாள் (55) என்பவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
    • உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.

    இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.

    ×