என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய காட்சி.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் முற்றுகை
- டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
- போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- சிவகங்கை பிரதான சாலையில் திரு மணவயல் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி, மாணவிகள் ரோட்டில் செல்லும் பொழுது மது பிரியர்களின் அச்சுறுத்தல் உள்ளது.மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
எனவே கோவில் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






