search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதோஷம்"

    • நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும்.
    • ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரதோஷ பூஜையில் பக்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள்.

    திருவண்ணாமலை தலத்திலும் அதேநிலை தான் இருந்தது.

    பிரதோஷ பூஜை தினத்தன்று அந்த காலத்தில் 50 பேர் வந்தாலே அதிகம்.

    ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளுகிறார்கள் என்று திருவண்ணாமலையில் வாழும் பழம்பெரும் சிவாச்சாரியாரான தியாகராஜ சிவாச்சாரியார் நினைவு கூர்ந்தார்.

    சமீப காலமாக திருவண்ணாமலையில் பிரதோஷ தினத்தன்று வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    பெரும்பாலான பக்தர்கள் அன்றைய தினம் விரதம் இருந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அன்றையதினம் மாலை நந்திக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.

    நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும்.

    மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளுவார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அப்போது பக்தர்கள் அரோகரா என்று முழக்கிமிடுவார்கள்.

    அந்த சமயத்தில் சிவபுராணம் மற்றும் நந்தி புராணம் படித்தால் அளவற்ற பலன்கள் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.

    • தொண்டி அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி

    தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பழமையான சிவாலயமான அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், அரிசி மாவு, பழங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக தஞ்சை பெரிய கோவில் உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் வாய்ந்தது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பெரிய கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

    இங்குள்ள மகாநந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
    • இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால்

    திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும்.

    பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும் தான்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும்.

    ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.

    ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.

    ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு.

    சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும்.

    அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும்.

    பின்னர் இரவு உணவு சாப்பிடலாம்.

    இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    இந்த நேரம் சிவனுக்கு மிகவும் உகந்த நேரம் ஆகும்.

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

    எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.

    • பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
    • 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தில்லை நகர் பகுதியில் அமைந்துள்ள ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால்,மஞ்சள், இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை,சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர். 

    • மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம்
    • சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம்

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிரா மணி பழக்ககாரன்காடு சோழீஸ்வரர் கோவில் உள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நடைபெறும்.

    மேலும் சங்கடகர சதுர்த்தி, சஷ்டி கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் பெறும்.

    இந்த நிலையில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் தேவூர் சென்றாயனூர், பெரமாச்சி பாளையம், காணியாளம்பட்டி வெள்ளாள பாளையம், சுண்ணாம்புக்க ரட்டூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர், குள்ளம்பட்டி மயிலம்பட்டி, காணியாளம்பட்டி, எடப்பாடி, கொட்டாயூர், வட்ராம்பா ளையம், பூமணியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

    • சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
    • சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

    • அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சக்திமலை முருகன் கோவிலில் பிரதோஷ நாளான நேற்று லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்திதேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷ சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    • இக்கோவில் ஆதிராகு தலமாக விளங்குகிறது.
    • நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கடைவீதி யில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வர முடையார் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் பிரதோ ஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் மூலவர் நாகேஸ்வரமுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.

    இதில் அதிமுகவை சேர்ந்த பொறியாளர் மார்கோனி, நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான பகதர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கோவில் சிவாச்சாரியார் முத்து குருக்கள் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திபகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறைஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷச விழாவை முன்னிட்டு மற்றும் நந்திபகவானுக்கு பால், பன்னீர்,சந்தனம் ,பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

    • சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை, பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர். இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவலவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.
    • நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    திருவொற்றியூரில் பிரதோஷக் காலம் மிகவும் போற்றி வணங்கத்தக்கதாக இருந்ததை திருவொற்றியூர் தலபுராணம் சிறப்பாக பேசுகிறது.

    சிவபெருமான் நஞ்சு உண்ட பின் தேவர் தொழ ஆடியருளிய திருக்கூத்தினை தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

    நாரத முனிவர், ராமன் மகன் லவனுக்கு திருவொற்றியூரின் பெருமைகளை கூறும்போது இங்கு வந்து படம்பக்க நாதரை பிரதோஷக் காலத்தில் தரிசித்தால் மிகபெரும் பயன்களை அடைவாய் என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து அயோத்தியில் இருந்து கிளம்பி லவன் தொண்டை மண்டல நாட்டு திருவொற்றியூர் நோக்கி வந்தான்.

    லவன் பிரதோஷம் வழிபாடு செய்ய திருவொற்றியூர் வரும் வழியில் இடையே பெரும் மழை வந்தது.

    பயணம் தடைப்பட்டது. ஓற்றியூர் இறைவனை பிரதோஷ காலத்தில் தரிசிக்க தடையாக பெருமழை வந்ததே என வருந்தி, தன் உடலை மாய்த்து உயிர் விட லவன் துணிந்தான்.

    அப்போது காளை வாகனத்தில் ரிஷப ரூபாராய் ஓற்றியூரான் லவன் இருந்த இடத்திலேயே தரிசனம் தந்து அருளினார்.

    அந்த இடம் லவன் பேரூர் என பெயர் பெற்றது.

    தற்போது போரூர் என வழங்கப்படுகிறது.

    இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.

    ஓற்றியூர் ஈசன் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்வோர்க்கும் இன்னும் வளங்கள் யாவும் வழங்குகிறார்.

    பிரதோஷ காலத்தில் நந்தியினை வழிபட்டும், ஆலகால விஷம் உண்டு ஆனந்த கூத்தாடிய பெருங் கருணைக்கடல் தியாகராஜாகிய சிவபெருமானை பக்தியுடன் திருவடிபணிந்து வழிபட்டால் எல்லா வளமும், நலமும் தேடி வரும்.

    திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநந்திஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷ காலத்தில் சென்று வழிபட்டால் சிறந்த பயன்களை பெறலாம்.

    நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    ×