search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • பேரூராட்சி குப்பைகளை விவசாய நிலத்தில் கொட்டக்கூடாது
    • அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. அப்போது எண்ணற்றோர் கோரிக்கை மனுக்களை நேரடியாக கலெக்டரிடம் வழங்கினர். இதன்ஒருபகுதியாக ஆனைமலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வா கிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா, கோட்டூர் மலையாண்டி பட்டணம் பகுதிக்கு உட்ப ட்ட பேரூராட்சியில் எண்ணற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். அங்கு உள்ள வழித்தடங்களில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால் அங்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    ஆனைமலை விவசாயிகள் சொந்த செலவில் பாதை அமைத்தும், குளம்-குட்டைகள் மூலம் மழை நீரை சேகரித்து விவசாயம்-குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை யில் பேரூராட்சி நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகிலும், விவசாய பாதை களுக்கு செல்ல முடியாத வகையி லும் குப்பைகள் கொட்டுவது, தமிழகஅரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு களை மீறுவதாக உள்ளது.

    மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனைமலை தாலுகாவிற்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்து இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது, ஏற்கனவே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கை பயன்படுத்த வேண்டும் எனற அறிவுறுத்தி சென்றார்.

    இருந்தபோதிலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகிறது. எனவே அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் பொது மக்கள் மனு
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே குறிச்சி கிராம மக்கள், அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், சோழாமதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது ஒரு வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக இருப்பதால், இடநெருக்கடியில் தவித்து வருகிறோம்.மேலும் தற்போது தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்கக் கூட போதுமான நிதி எங்களிடம் இல்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மேலும் எங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது நாச்சிக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கிளை துணை செயலாளர் கல்பான் தலைமையிலான பொறுப்பாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கடந்த மே மாதத்தில் குடிநீர் பிரச்சனை காரணமாக காலி குடங்களுடன் ஊராட்சியை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் பல கோரிக்கைகளை முன் வைத்து சுமூகமாக முடிந்தது.

    அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முக்கிய கோரிக்கையான நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.அப்பேச்சுவார்த்தையில் நாச்சிகுளத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் அளவுள்ள புதிய நீர் தேக்க தொட்டி கட்ட அனுமதி கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

    இத்தொட்டியை விரைவாக கட்டினால் தான் நாச்சிகுளம் முக்கிய பகுதிகளுக்கு தண்ணீர் பிரச்சனை குறையும்.ஆகையால் ஜல்ஜீவன் திட்டத்தில் அனுமதி கிடைத்துள்ள குடிநீர் தேக்க தொட்டியை விரைவாக கட்டிதர வேண்டும்.

    மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு, புதியசாலை வசதி போன்ற பணிகளை விரைவாக அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து பொதுமக்க ளும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் கம்யூனிஸ்டு சார்பில் மனு அளிக்கப்பட்டது
    • மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

     ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் பகுதி பழங்குடி மற்றும் தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் தாசில்தார் துரையை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, எஸ்.மீனா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எ.ராதா, கே.எம்.பசுபதி மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
    • மொத்தமாக 125 மனுக்கள் பெறப்பட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள சொக்கனாவூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அண்ணாதுரை எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் பெரியகோட்டை சரகத்திற்கு உட்பட்ட சொக்கனாவூர், புளியக்குடி கிராமங்களுக்கு ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், கல்வி கடன், உள்ளிட்ட 125 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து அவர் வருவாய்த்துறை மூலம் விலையில்லா வீட்டு மனை பட்டா 110 நபர்கள், 10 நபர்களுக்கு பட்டா மாறுதலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், விதவைகள், ஈமச்சடங்கு உதவித்தொகைகள் 49 நபர்களுக்கும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ (பொ) வாசுதேவன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள்

    இளங்கோ, கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்து அதில் முறையான தீர்வு காணமுடியாத 74 மனுக்கள் மீது விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 63 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 11 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், லஷ்மண குமார், மனோஜ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மனுதாரர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சங்கத்தினர் கலெக்டரிடம் முறையிட்டு மனு அளித்தனர்
    • அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவர் மாதேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் சார்பில் மாநில தலைவர் தங்கமணி தலைமையில் சங்கத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர். எதிர்கால சமுதாயம் நலன் கருதி வளமான சமுதாயம் அமைத்திட தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    • பாடாலூரில் உள்ள மக்கள் பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்
    • கலெக்டர் கற்பகத்திடம் மனு அளித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாடாலூரில் உள்ள குலாலர் சமூகத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாடாலூர்-தெரணி சாலையில் வடபகுதியில் மண்பாண்ட தொழில் செய்யும் குலாலர் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அந்தப்பகுதியில் உள்ள எங்கள் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட காலிமனையில் கடந்த 2002-ம் ஆண்டில் அரசு மூலம் பொது கழிவறைகள் கட்டப்பட்டன. அந்த கழிவறைகள் தற்போது 7 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளன. இந்த நிலையில் தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கழிவறைகளை திறக்க வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் துர்நாற்றம் ஏற்படும். எனவே அந்த கழிவறைகளை முற்றியிலும் இடித்து, நாங்கள் சுகாதாரமாக வாழவும், எங்களின் குல தொழிலான மண்பாண்ட தொழிலை செய்வதற்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • குடியிருப்பு பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சம் தருவதாக வேதனை
    • நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் மற்றும் பல்வேறு பகுதிகளில் 3 தலைமுறைக்கும் மேலாக வசிக்கும் மக்கள் பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருகின்றனா்.

    இவ்வாறு பல ஆண்டுகளாக மக்கள் வசிக்குமிடங்கள் வனப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் வனத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

    இந்நிலையில் காந்தி நகா் விவசாயிகள் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸிடம் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:- இப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்பதோடு முறைப்படி வரியும் செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.

    இந்நிலையில் குடியிருப்புப் பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றப்பட்டுள்ள நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

    • ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என பேசினார்.
    • நாளை சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண், பிரபல சினிமா நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் சந்தித்தனர்.

    இந் நிலையில் ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் சிறைத்துறை அதிகாரிகளிலும் அனுமதி கேட்டு மனு அளித்து உள்ளார்.

    அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆந்திரா சென்று ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என பேசினார்.

    இதேபோல் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்ட பிறகு அவரது மகன் லோகேஷுக்கு போன் செய்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

    இதற்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்தார். ரோஜாவுக்கு தெலுங்குதேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நாளை சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று காலை ஜெயிலுக்கு சென்றார். அதிகாரிகள் கணவரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுத்தனர்.

    வாரத்தில் 3 நாட்கள் மனைவி கணவரை சந்திக்கலாம் என விதி உள்ளது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் வேண்டும் என்று எனக்கு அனுமதி மறுத்தனர் என புவனேஸ்வரி தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களும் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்தமனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு விவசாயம், விசைத்தறிகூடம் , கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில் பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே பணிக்கம்பட்டி கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×