என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு அளிக்க வந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்
- தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
- 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






