search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் அக்ரி மாதவன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த அம்மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வேளாண்மை பட்ட தாரிகளை முதுநிலை ஆசிரி யர்களாக நியமனம் செய்ய வேண்டுதல்.

    மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேளாண் அறிவியல் ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப பட்டதாரிகளை பள்ளிக்கல்வித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றில் உரிய பணியிடங்களில் நியமனம் செய்து பல்லாயிரக்கணக்கான வேலையில்லா வேளாண் பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது.
    • சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி

    கோவை,

    தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. அப்போது அந்த பெட்ரோல் குண்டு போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பட்டு கீழே விழுந்தது.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டு பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வளா கத்துக்குள் 4 பேர் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை போல் தோற்றத்தை ஏற்படுத்த தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    இதற்கு பா.ஜ.க.வும், கவர்னரும் துணை போகின்றனர். சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பது போல பா.ஜ.க 5 பேர் கொண்ட விசாரணை குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த வேகத்தை பா.ஜ.க அரசு மணிப்பூரில் கடந்த 6 மாதமாக நடந்து வரும் கலவரத்தில் ஏன் காட்டவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமீப கால ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பா.ஜ.க.வும்., கவர்னரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியல் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    சென்னையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வக்பு வாரிய செயலாளர் ரபி புல்லாவை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம் முகைதீன் ஆண்டவர்பள்ளிவாசல் சுற்றுச்சுவரை சீரமைக்க வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது கொடுத்த கோரிக்கையின் அடிப்படை யிலும், மத்தளம்பாறை முகைதீன் ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ ஆம்பூர் பாதுஷா பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைகள் அடிப்படையிலும், முதலியார்பட்டி முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர் முகமது கனி கோரிக்கையின் அடிப்படையில் 11-வது வார்டு நைனா முகமது ஜூம்மா பள்ளிவாசலுக்கும், கடையநல்லூர் கிழக்கு பகுதி அல் மூப்பன் கீழத்தெரு நைனா முகம்மது ஜூம்மா பள்ளிவாசலுக்கு கவுன்சிலரும், முன்னாள் நகர செயலாளரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான முகமது அலி கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சுவர் கட்டவும் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஏற்கனவே சிவபத்மநாபன் கொடுத்த மனுவின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியலை சிவபத்மநாதனிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் மற்றும் வக்புவாரிய செயலாளருக்கு சிவபத்மநாதன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

    • பெரம்பலூரில் போலீசார் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன.
    • ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

    திருப்பூர்,அக்.26-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன. இங்கு மட்டும், தினசரி ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வரவு, செலவு கணக்கும் நடைபெறுகிறது. இதில் 80 சதவீத துணிகள் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டிலேயே குறைந்த விலையில் பயன்படுத்தப்படுகிறது.

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும் போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.

    வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

    சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும்.

    • பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றார்.
    • மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முதுகுளத்தூர் தாலுகா மைக்கேல் பட்டணம் கிரா மத்தில் பொதுமக்களி டம் குறைகள் கேட்டு அவர்களி டம் இருந்து மனுக்களை பெற்றார். முன்னதாக அவரை மைக்கேல் பட்ட ணம் ஊராட்சி மன்ற தலை வர் குழந்தை தெரஸ் சிங்க ராயர் வரவேற்றார்.

    அப்போது கலெக்டர் விஷ்ணுசந்திரன், பொதுமக் களிடம் போதுமான குடிநீர் கிடைக்கிறதா? நிலத்தடி நீர் உள்ளதா? என கேட்டறிந் தார். இதற்கு பதிலளித்த பொதுமக்கள் குடிநீர் தின சரி வருவதில்லை எனவும், சிலநேரங்களில் சிரமம் ஏற்படுகிறது என தெரிவித் தனர். மேலும் கலெக்டரிடம் போர்வெல் அமைத்துத்தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்தார்.

    மைக்கேல் பட்டணம் பஞ்சாயத்து எல்லையில் சோலார் பிளாண்ட் உள் ளது. ஆனால் தொழில் வரி செல்லூர் பஞ்சாயத்தில் செலுத்தப்படுகிறது. சோலார் பிளாண்டை சுற்றி யுள்ள சாலைகளை மைக் கேல் பட்டணம் ஊராட்சி தான் மராமத்து செய்து வருகிறது. ஆகையால் மைக் கேல் பட்டணம் ஊராட்சி எல்லையில் உள்ள சோலார் பிளாண்ட் தொழில் வரியை மைக்கேல் பட்டணம் ஊராட்சியில் செலுத்தினால் ஊராட்சித் வளர்ச்சியடை யும் என்றார். மேலும் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த னர். மேலும் பேவர்பிளாக் சாலை, கல்வெட்டுகள் வேலை முடிக்கப்படாமல் உள்ளவற்றை சுட்டிக் காட்டி உடனடியாக முடிக்க வேண் டும் என உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி, ஊராட்சி எழுத் தர் லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் னர் பிரபக்கவூர் ஊராட்சி மீசல் கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக் களிடம் குறைகள் கேட்டார். பிரபக்களுர் ஊராட்சி மன்ற தலைவர் தீப்ரநீதிரா ஜன் வரவேற்றார். குடிநீர், மின்விநியோகம் சாலை வசதி ஆகியவற்றை கேட்ட றிந்தார். மீசல் கிராமம் முழுவதும் மண் சாலையாகவே உள் ளன. இதனை பேவர் பிளாக் சாலையாக மாற்றித் தரவேண்டும் எனவும், போர்வெல் அமைத்துதர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக் டர் தெரிவித்தார்.

    • மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுதர கோரிக்கை
    • தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மற்ற நாட்களிலும் பொதுமக்கள் மனு அளித்து செல்கிறார்கள். மனு அளிக்க வருபவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை தடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பூதப்பாண்டி அருகே நடுவூர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது சொத்தை மகன்கள் எழுதி வாங்கி விட்டதாகவும், அதன் பிறகு தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    எனவே அந்த சொத்தை மீண்டும் எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதியில் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    • சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது.
    • அணையில் இருந்து உபரி நீர் வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    தென்காசி:

    தமிழக நீர் வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சென்னையில் நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் வழியாக அடவிநயினார் அணையில் இருந்து உபரி நீர் விவசாயத்திற்கு வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அங்கு கான்கிரீட் தளம் அமைத்து தருவதற்கு தனியாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    குழிப்பிறையில் துணை மின் நிலையம் அமைக்க கோரி9 ஊராட்சி மன்ற தலைவர்கள் மின்வாரியத்தில் மனு

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூழிபிறை டிரஸ்ட் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் குழிபிறை மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, ஆத்தூர், செவலூர், கொவனூர், வீரனாம்பட்டி, வாழைகுறிச்சி, ராங்கியம், மேலப்பனையூர் மற்றும் பனையப்பட்டி ஊர்களில் 30 வருடங்களாக தினந்தோறும் அதிகப்படியான மின்வெட்டு, அதிகமான மின்அழுத்த குறைபாடு இருந்து வருகிறது. போதிய அளவில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 15 லிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்கு துணை மின் நிலையம் இல்லை.

    சமீபத்தில் 12 முறைக்கு மேல் தினந்தோறும் எங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. லோ வோல்எடேஜ் காரணமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் மோட்டார்கள், பம்புகள், வீட்டு உபகரணங்கள் எல்லாம் அடிக்கடி பழுதடைக்கின்றன.

    துணைமின் நிலையத்திற்கான மனுவை ஏப்ரல் 2022ல் கொடுத்து, அதற்கான 2 ஏக்கர் நிலத்தையும் குழிபிறை ஊராட்சி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதுவரை ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்பட வில்லை. புதிய மின்மாற்றிகளை அமைக்க 16.2.2022 ல் கொடுத்த மனுவிற்கு இன்று வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் துணைமின் நிலையம் அமைப்பதோடு, அப்பகுதியில் 6 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பேரூராட்சி குப்பைகளை விவசாய நிலத்தில் கொட்டக்கூடாது
    • அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. அப்போது எண்ணற்றோர் கோரிக்கை மனுக்களை நேரடியாக கலெக்டரிடம் வழங்கினர். இதன்ஒருபகுதியாக ஆனைமலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வா கிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா, கோட்டூர் மலையாண்டி பட்டணம் பகுதிக்கு உட்ப ட்ட பேரூராட்சியில் எண்ணற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். அங்கு உள்ள வழித்தடங்களில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால் அங்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    ஆனைமலை விவசாயிகள் சொந்த செலவில் பாதை அமைத்தும், குளம்-குட்டைகள் மூலம் மழை நீரை சேகரித்து விவசாயம்-குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை யில் பேரூராட்சி நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகிலும், விவசாய பாதை களுக்கு செல்ல முடியாத வகையி லும் குப்பைகள் கொட்டுவது, தமிழகஅரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு களை மீறுவதாக உள்ளது.

    மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனைமலை தாலுகாவிற்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்து இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது, ஏற்கனவே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கை பயன்படுத்த வேண்டும் எனற அறிவுறுத்தி சென்றார்.

    இருந்தபோதிலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகிறது. எனவே அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் பொது மக்கள் மனு
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே குறிச்சி கிராம மக்கள், அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், சோழாமதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது ஒரு வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக இருப்பதால், இடநெருக்கடியில் தவித்து வருகிறோம்.மேலும் தற்போது தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்கக் கூட போதுமான நிதி எங்களிடம் இல்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மேலும் எங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

    ×