search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 20-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமை கிடைத்துள்ள தாகவும் ஆனால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வில்லை என கூறி 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா ராஜாவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர். அப்போது தாசில்தார் இல்லாததால் திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் டோமிஸ் சேவியரை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
    • கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் என்பவரது மகன் திருமாறன். (வயது3). தனது தாயுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திருமாறன் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை வழங்கி னான். அதில் கூறியிருப்பதாவது:-

    குத்தப்பாஞ்சான் ஊராட்சி, பரும்புநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆரம்ப கல்வி பயின்று வருகிறேன். இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். எங்கள் பரும்பு நகர் பகுதியில் பரும்புநகர் மெயின் ரோடு வாறுகால் அமைக்கும் பணி நடைபெறு கிறது. இந்த வாறுகால் வழியாக கிராமத்தில் உள்ள கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது. கழிவுநீர் தேக்குவதால் அங்கு துர்நாற்றம் வீச கூடும். கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகும் இதனால் அங்கன்வாடியில் பயிலும் இளம் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் உயிர்கொல்லி நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அமைக்கும் வறுகால் பணியினை தடைசெய்து மாற்றுமுறையில் வேறு இடத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 10 லட்சம் தொழில் முனைவோர், ஒரு கோடி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்
    • சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவர கோரிக்கை

    கோவை,

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர். ஜி. அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குறு சிறு நடுத்தர தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மூலப்பொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட கார ணங்களால் தவித்து வரும் தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்த மின்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாங்கள் பயன்படுத்தும் யூனிட் கட்டணம் 20 சதத்துக்கும் மேல் உயர்த்தியும், நிலை கட்டணம் கிலோ வாட்டுக்கு 430 சதம் உயத்தியும், இதுவரை இல்லாத புதிய யுக்தியாக பீக்ஹவர்க்கான கட்டணம் நிரணயம் செய்து 24 மணிநேரத்தில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் கணக்கீடு செய்து பீக்ஹவர் கட்டணமாக 15 சதம் கூடுதலாக வசூ லிக்கப்படுகிறது.

    10 சதவீத லாபம் கூட இல்லாமல் குறு, சிறு நடுத்தர தொழில்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டில் உயர்த்தப்பட்ட 40 சதவீதம் மின் கட்டண உயர்வால் தொழில் துறை யினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொழில்களை பாதுகாக்கும் பொருட்டாக மக்களின் பிரதிநிதிகளான தாங்கள் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் தொழில் முனைவோர்களின் வாழ்வா தாரமும் ஒரு கோடிக்கு மேல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக சட்டமன்றத்தில் தொழில் சார்ந்த பிரச்சினைக்கு தனி தீர்மா ன கொண்டு வந்து விவாதித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ெதாழில் துறை க்கான மின்சார நிலைக்க ட்டணத்தை முழுமையாக திரும்பபெற வேண்டும். பீக்ஹவர் கட்டணம் முழுமையாக திரும்பபெற வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பி.என்.ரகுநாத ராஜா, பொன் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டன உயர்வால் தமிழகத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான தொழிற்சா லைகள் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் தமிழக முதல் வர் நேரடியாக தலை யிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிற் சாலைகள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழில் உற்பத்தி ஒரு நாள் நிறுத்தம் கதவடைப்பு. சென் னையில் மாபெரும் உண் ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தி உள்ளோம். இது தொடர்பாக தமிழக சிறு தொழில் அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரி களிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

    எங்களது கோரிக்கைக ளில் கிலோ வாட்டுக்கான நிலை கட்டணம் குறைப்பு என்பது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எங்களது கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும். அதற்கான தொடர் முயற்சி யின் ஒரு பகுதியாக ஏழாம் கட்ட கவன ஈர்ப்புக்காக இன்று (6-ந்தேதி) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களையும் நேரடியாக சந்தித்து மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண் டும் என்பதை தமிழக முதல் வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

    அதன்படி மதுரையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பாக மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவ ரும் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை குறைக்க கூறும் கோரிக்கை மனுவை அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி–வித்துள்ளனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது.
    • கோரிக்கை மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 96 பயனாளிகளுக்கு ரூ.12.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பாலையூர், காஞ்சிவாய், நல்லாவூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய கிராம ங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமை யொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதியில் இருந்து அலுவலர்கள் பாலையூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற 101 கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ததில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா தலா ரூ.20,000 மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகன் திருமணம்) 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகள் திருமணம்) 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், இயற்கை மரண உதவி த்தொகை 21 பயனாளிகளுக்கு தலா ரூ.21,500 உள்பட மொத்தம் 96 நபர்களுக்கு ரூ.12,89,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை 7092255255 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கை மற்றும் புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சமூக பாதுகாப்பு த் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கோட்டாட்சியர் யுரேகா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
    • பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் தாலுக்கா மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் கோ.பூவனூர், மாத்தூர், வயலூர் மற்றும் கோ.பவழங்குடியை சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிக்கென கட்டப்பட்ட 10 வகுப்பறையில் அமர்ந்து பயில்கின்றனர். அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பறையிலும், 4. 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனித்தனி வகுப்பறையிலும் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமும் மிகவும் பழைமையானது என்பதால், கட்டிடத்தின் காரைகள் மாணவர்கள் மீது விழுகின்றன. அப்போதெல்லாம் மாணவர்கள் வெளியில் அமரவைக்கப்பட்டும், கலை அரங்கத்திலும் அமர வைக்கப்படு கின்றனர்.

    எனவே, உயர்நிலை பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற்றோர் கல்வி அமைச்சர், கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் என அனைவரிடமும் மனு கொடுத்தனர். 3 ஆண்டு களாக மனு கொடுத்தும் பள்ளியின் நிலை மாறாமல் பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தி லேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்ப றைக்குள் செல்லாமல் புறக்கணித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பேச்சு நடத்திய போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அவரது பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்த தகவல் அறிந்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீ சார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தி வந்த மாணவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் நியாயமான கோரிக்கை குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்து, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் தேவி மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனை யேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தனி மாவட்ட வருவாய் அலுவலர்சரவணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.
    • விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பூமலூர் அபிராமி கார்டன் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக்கூடிய நிலையில் மழை பெய்யும் போது அப்பகுதியில் முறையான வடிகால் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு மட்டுமல்லாமல் , விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது. மேலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் .

    மழைநீர் செல்லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கிரிஷ் சரவணன் , ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    • 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்தார்.
    • சொத்துகளை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவரது சொத்துகளை தனது 2 மகன்களும் அபகரித்துக்கொண்டு தன்னை கவனிக்காமலும், 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், சொத்துகளை மீட்டு தரக்கோரி ரங்கநாயகி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    இதேபோல் மோப்பரிபாளையம் பேரூராட்சி எம் பாப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பேரூராட்சியால் எங்கள் பகுதிக்கு கடந்த 2013 ம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் இதனை ஆக்கிரமித்து கற்களை கொட்டி வைத்து செல்ல வழி இல்லாமல் செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று காலை முதல் ஏராளமான பொது மக்கள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் ஒன்றியம் தொழுதூர் மற்றும் திட்டக்குடி மேற்கு குறுவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் விவசாயிகள் திடீ ரென்று தாங்கள் கொண்டு வந்த கருகிய மக்கா சோளத் துடன் திரண்டு நின்றனர்.அவர்கள் வைத்தி ருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததா வது:-எங்கள் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் மக்கா சோளம் பயிரிட்டு இருந்தோம். மானாவாரி விவசாயி களான நாங்கள் மழைைய நம்பி வங்கியில் கடன் பெற்று நகைகளை அடகு வைத்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து இருந்தோம். கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நாங்கள் பயிரிட்ட மக்காச்சோளம் முழுவதும் கருகி படைப்புழுக்களுக்கு இரையாகி உள்ளது

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம். மேலும் 90 நாளான மக்காச்சோளம் பயிரிட்டு 80 நாட்கள் கடந்த நிலையில் இனி மழை பெய்தாலும் உரிய மகசூல் பெற இயலாத நிலையில் உள்ளோம். ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் அக்ரி மாதவன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த அம்மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வேளாண்மை பட்ட தாரிகளை முதுநிலை ஆசிரி யர்களாக நியமனம் செய்ய வேண்டுதல்.

    மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேளாண் அறிவியல் ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப பட்டதாரிகளை பள்ளிக்கல்வித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றில் உரிய பணியிடங்களில் நியமனம் செய்து பல்லாயிரக்கணக்கான வேலையில்லா வேளாண் பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது.
    • சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி

    கோவை,

    தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. அப்போது அந்த பெட்ரோல் குண்டு போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பட்டு கீழே விழுந்தது.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டு பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வளா கத்துக்குள் 4 பேர் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை போல் தோற்றத்தை ஏற்படுத்த தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    இதற்கு பா.ஜ.க.வும், கவர்னரும் துணை போகின்றனர். சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பது போல பா.ஜ.க 5 பேர் கொண்ட விசாரணை குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த வேகத்தை பா.ஜ.க அரசு மணிப்பூரில் கடந்த 6 மாதமாக நடந்து வரும் கலவரத்தில் ஏன் காட்டவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமீப கால ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பா.ஜ.க.வும்., கவர்னரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×