search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குகருகிய மக்காச்சோளம் பயிருடன்மனு கொடுக்க வந்த விவசாயிகள்
    X

    கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் கையில் கருகிய மக்காச்சோளத்துடன் மனு கொடுக்க வந்தனர்.

    கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குகருகிய மக்காச்சோளம் பயிருடன்மனு கொடுக்க வந்த விவசாயிகள்

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று காலை முதல் ஏராளமான பொது மக்கள் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் திட்டக்குடி அருகே உள்ள மங்களூர் ஒன்றியம் தொழுதூர் மற்றும் திட்டக்குடி மேற்கு குறுவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் விவசாயிகள் திடீ ரென்று தாங்கள் கொண்டு வந்த கருகிய மக்கா சோளத் துடன் திரண்டு நின்றனர்.அவர்கள் வைத்தி ருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததா வது:-எங்கள் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் மக்கா சோளம் பயிரிட்டு இருந்தோம். மானாவாரி விவசாயி களான நாங்கள் மழைைய நம்பி வங்கியில் கடன் பெற்று நகைகளை அடகு வைத்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து இருந்தோம். கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நாங்கள் பயிரிட்ட மக்காச்சோளம் முழுவதும் கருகி படைப்புழுக்களுக்கு இரையாகி உள்ளது

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளான நாங்கள் எங்கள் குழந்கதைளின் கல்வி செலவு, உணவு மற்றும் மருத்துவ செலவுகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றோம். மேலும் 90 நாளான மக்காச்சோளம் பயிரிட்டு 80 நாட்கள் கடந்த நிலையில் இனி மழை பெய்தாலும் உரிய மகசூல் பெற இயலாத நிலையில் உள்ளோம். ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×