search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி அருகே நிறுவப்படும் வாறுகால் பணியை நிறுத்த வேண்டும்-3 வயது மாணவன் கலெக்டரிடம் மனு
    X

    அங்கன்வாடி அருகே நிறுவப்படும் வாறுகால் பணியை நிறுத்த வேண்டும்-3 வயது மாணவன் கலெக்டரிடம் மனு

    • அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
    • கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் என்பவரது மகன் திருமாறன். (வயது3). தனது தாயுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திருமாறன் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை வழங்கி னான். அதில் கூறியிருப்பதாவது:-

    குத்தப்பாஞ்சான் ஊராட்சி, பரும்புநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆரம்ப கல்வி பயின்று வருகிறேன். இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். எங்கள் பரும்பு நகர் பகுதியில் பரும்புநகர் மெயின் ரோடு வாறுகால் அமைக்கும் பணி நடைபெறு கிறது. இந்த வாறுகால் வழியாக கிராமத்தில் உள்ள கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது. கழிவுநீர் தேக்குவதால் அங்கு துர்நாற்றம் வீச கூடும். கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகும் இதனால் அங்கன்வாடியில் பயிலும் இளம் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் உயிர்கொல்லி நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அமைக்கும் வறுகால் பணியினை தடைசெய்து மாற்றுமுறையில் வேறு இடத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×