search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்க பள்ளியில் இயங்கி வரும் உயர்நிலை பள்ளி புதிய கட்டிடம் கேட்டு போராடிய மாணவர்கள்
    X

    வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சவார்த்தை நடத்தியபோது எடுத்தபடம்

    தொடக்க பள்ளியில் இயங்கி வரும் உயர்நிலை பள்ளி புதிய கட்டிடம் கேட்டு போராடிய மாணவர்கள்

    • அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
    • பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் தாலுக்கா மங்கலம்பேட்டை அருகே கோ.பவழங்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளியாக செயல்பட்ட இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே புதிய கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் கோ.பூவனூர், மாத்தூர், வயலூர் மற்றும் கோ.பவழங்குடியை சேர்ந்த 240 மாணவ, மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிக்கென கட்டப்பட்ட 10 வகுப்பறையில் அமர்ந்து பயில்கின்றனர். அதாவது 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரு வகுப்பறையிலும், 4. 5-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனித்தனி வகுப்பறையிலும் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடமும் மிகவும் பழைமையானது என்பதால், கட்டிடத்தின் காரைகள் மாணவர்கள் மீது விழுகின்றன. அப்போதெல்லாம் மாணவர்கள் வெளியில் அமரவைக்கப்பட்டும், கலை அரங்கத்திலும் அமர வைக்கப்படு கின்றனர்.

    எனவே, உயர்நிலை பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென மாணவர்களின் பெற்றோர் கல்வி அமைச்சர், கல்வி செயலாளர், மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் என அனைவரிடமும் மனு கொடுத்தனர். 3 ஆண்டு களாக மனு கொடுத்தும் பள்ளியின் நிலை மாறாமல் பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தி லேயே உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் இன்று காலை வகுப்ப றைக்குள் செல்லாமல் புறக்கணித்து பள்ளியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பேச்சு நடத்திய போதும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அவரது பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்த தகவல் அறிந்து மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீ சார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தி வந்த மாணவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களின் நியாயமான கோரிக்கை குறித்து அரசு அதிகாரி களிடம் தெரிவித்து, விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் தேவி மாணவர்களிடம் உறுதியளித்தார். இதனை யேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×