என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதி கோரி பொது மக்கள் மனு
- குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் பொது மக்கள் மனு
- அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே குறிச்சி கிராம மக்கள், அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், சோழாமதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது ஒரு வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக இருப்பதால், இடநெருக்கடியில் தவித்து வருகிறோம்.மேலும் தற்போது தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்கக் கூட போதுமான நிதி எங்களிடம் இல்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். மேலும் எங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
Next Story






