search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surandai"

    • ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
    • சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

    சுரண்டை:

    தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுரண்டை ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா மற்றும் சுரண்டை வரகுணராமபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், தி.மு.க .நகர செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகர் மன்ற உறுப்பினர் சாந்தி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதேபோல் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆறுமுகசாமி,பூல் பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ்,ஆலடிப்பட்டி எஸ்.கே.ராமசாமி, சங்கர நயினார், கூட்டுறவு கணேசன், இளைஞர் அணி முல்லை கண்ணன்,டான் கணேசன்,மெடிக்கல் கார்த்திக்,சசிகுமார், ஜேம்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர்,தேவேந்திரன், பால் துரை, நகராட்சி உறுப்பினர்கள் ஜெயராணி வள்ளி முருகன்,அமுதா சந்திரன்,வேல்முத்து, ரமேஷ்,ராஜ் குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி தலைவர் வள்ளி முருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் சக்திவேல் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், கமிஷனர் முகமது சம்சுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் சுரண்டை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதார பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.

    • சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மவுன விரத போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

    சுரண்டை:

    தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மவுன விரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். கவுரவ விரிவுரையாளர்கள் அண்ணாமலை, மாரிச்செல்வி, குழல் வாய்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்றார்.

    போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் அரசாணை எண் 56-ன் கீழ் பணி வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த ஊதிய நிர்ணயத்தின்படி ஒவ்வொரு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணிக்காலம் முழுமைக்குமான நிலுவைத் தொகை வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுன விரத போராட்டம் நடந்தது. இதில் கவுரவ விரிவுரையாளர்கள் முத்துலட்சுமி, பிரியா ராமவாணி, ஜெகானந்தஜோதி, முத்தரசி, சுபசங்கரி, அரிராம், விஜய் அமிர்தராஜ் உட்பட அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

    • சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியின் 28-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியின் 28-வது ஆண்டு விழா நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், துணைத்தலைவர் சங்கராதேவி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரா கல்வி அறக்கட்டளையின் டிரஸ்டி சீதாராமன், பள்ளியின் தாளாளர் விஜயன் அருணகிரி, முதல்வர் ஞானமணி துரைச்சி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் சென்ற ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ஷ்யாம் சுந்தர், 2-ம் மதிப்பெண் பெற்ற தனுசுயா மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பிரியங்கா, 2-வது மதிப்பெண் பெற்ற மாணவன் ஹரிஸிபம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி விளையாட்டு விழாவில் நடைபெற்ற விளையாட்டுகளில் இருந்து கிடைத்த ஒட்டுமொத்த புள்ளிகளில் முதல் இடத்தை பிடித்த நீல நிற அணி மற்றும் 2-வது இடத்தை பிடித்த பச்சை நிற அணி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்பு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    • சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் சின்னதாய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை மற்றும் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சந்திரவேலு, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் கண்ணன் வரவேற்று பேசினார் . சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் சின்னதாய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் வாக்குசாவடி பணியாளர்கள் வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணி வந்தனர். வி.ஏ.ஓ.க்கள் ராதாகிருஷ்ணன்,

    ராஜலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன், கல்லூரி பேராசிரியர்கள் மனோரஞ்சிதம், திருநாவுக்கரசு, பிரான்ஸிஸ் ஆபிரகாம், சேர்மன், அமலா ராணி, பழனிகனி, மகாலட்சுமி, மதியழகன், சாந்தி அகடமி ரமேஷ், கிராம உதவியாளர்கள் மாரியம்மாள், கற்பகம், கலா, மங்களம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவன் தமிழ்ச்செல்வன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
    • அமைச்சரிடம், சிவபத்மநாதன் பேசி சிறுவனின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம்,சுரண்டை அருகே உள்ள மேலராஜகோபாலபேரி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. தொழிலாளி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12) இந்த சிறுவன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

    இதனால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தன்னிடம் பணம் இல்லை எனவும், தனது மகனின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் சிறுவனின் தந்தை குருசாமி கோரிக்கை வைத்தார்.

    அதனையேற்று சிறுவனின் மருத்து செலவுக்கு சிவபத்மநாதன் ரூ.5 ஆயிரம் வழங்கினார்.தொடர்ந்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி சிறுவனின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, யூனியன் சேர்மன்கள் காவேரி சீனித்துரை, திவ்யா மணிகண்டன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சேசுராஜன்,பொதுக்குழு உறுப்பினர் அருள்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன்,செல்லத்துரை , குமார், டோம்னிங், கண்ணன். கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
    • மாணவர்கள் நடனம், பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசினை பெற்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் நெல்லையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கலை கலாச்சார மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் 74 பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியை சேர்ந்த ஒவ்வொரு மாணவர்களும் சிறப்பான முறையில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.

    தனி நடனம், குழு நடனம், ஓவியம் வரைதல், பானையில் ஓவியம் வரைதல்,கோலப்போட்டி ,தமிழ் பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசும்,தமிழ் கட்டுரைப் போட்டி, ஆங்கில கட்டுரைப்போட்டி, குழு பாடலில் 2-வது பரிசும் பெற்றுள்ளனர். பள்ளி முழு மைக்கான 2-வது பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

    • அந்தோணி செல்வம் என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரித்தனர்.
    • பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி தலைமையிலான போலீசார் நேற்று அச்சங்குன்றம் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    புகையிலை

    அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணி செல்வம்(வயது 46) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர்.

    அப்போது அதில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அவரை சோதனை செய்ததில் புகையிலை விற்ற பணம் ரூ.23 ஆயிரம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    கைது

    தொடர்ந்து அந்தோணி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அச்சங்குன்றம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர்(38) என்பவருக்கு சொந்தமான குடோனில் புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும் சந்திரசேகரையும் போலீசார் கைது செய்தனர்.

    • நவீன சுகாதார வளாகம் திறப்பு விழாவிற்கு சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    சுரண்டை:

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சுரண்டை பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் சவுந்தர் வரவேற்று பேசினார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார்,ஆறுமுகசாமி,திமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன்,சுப்பிரமணயன், ஸ்டீபன் சத்யராஜ், அல்லா பிச்சை, பீர்முகமது,ஜோசியர் தங்க இசக்கி,தனலட்சுமி மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, பிரபாகர், கஸ்பா செல்வம், ஆட்டோ செல்வராஜ்,ராஜன், சுரண்டை நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன்,அமுதா சந்திரன், ராஜ்குமார்,உஷா பேபி பிரபு,வேல் முத்து, ராஜேஷ், அந்தோணி சுதா ஜேம்ஸ், செல்வி, சிவசண்முக ஞான லெட்சுமி,மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    • நகராட்சி பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கூறினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அப்போது நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஓட்டல், மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்பக கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகரின் முக்கியமான பகுதிகளில் நகராட்சியின் தூய்மை பணி குறித்து விளம்பரப்படுத்தப்படும். சுரண்டை நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சுரண்டை பகுதியில் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. அங்கு நகராட்சி சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கருப்ப சாமி, நகராட்சி மேஸ்திரி ராமர், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
    • தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய அணி அப்துல் காதர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுரண்டை நகராட்சி பகுதியில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து மரக்கன்றுகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ×