search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surandai"

    • ராமச்சந்திரன் நடத்தி வரும் மருந்தகத்தில் அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது.
    • வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி உள்ளிட்ட அதிகாரிகள் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை கண்டுபிடிக்கும் பணியில் அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பாவூர் வணிகர் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது42) என்பவர் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணையில் நடத்தி வரும் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு உரிய அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வீ.கே. புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா, தேசிய சுகாதாரக் குழும ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடைய நம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், ஆலங்குளம் சரக மருத்துவ ஆய்வாளர் பவித்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீ மூல நாதர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், வி.ஏ.ஓ. உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், சுதாகர் உள்ளிட்டோர் மருந்தகத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.

    • பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இயற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கியவர் கலைஞர்.
    • உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கல்பனா அண்ணப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் செரீப், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, மாநில விவசாய அணி அப்துல் காதர், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனுர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நகர செயலாளர் ஜெயபாலன் வரவேற்று பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் திட்ட கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி பேசும்போது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இயற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கியவர் கலைஞர். அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்காக கட்டணமில்லா பஸ் சேவை, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமை தொகை வழங்கி உள்ளார். தமிழக முதல்-அமைச்சரின் புதுமைப்பெண்கள் திட்டத்தால் உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், சீனித்துரை, அழகு சுந்தரம், ஜெயக்குமார், திவான் ஒலி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது, செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், சாக்ரடீஸ், ஏ.பி. அருள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பேரூர் செயலாளர்கள் முத்து, சுடலை, பண்டாரம், சத்யராஜ், ஒன்றிய பிரதிநிதி கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் ஆறுமுகசாமி, பூல் பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ், சங்கரநயினார், சக்தி சாமுவேல்மனோகர், ஆலடிப்பட்டி ராமசாமி, வெள்ளத்துரை பாண்டியன், கவுன்சிலர் பரமசிவன், ஜேம்ஸ், சசிகுமார், வைகை கணேசன், ஜேம்ஸ், இளைஞர் அணி கோமதிநாயகம், ரத்தினசாமி, அருணா, தங்கலட்சுமி மாரியப்பன், லிசி ஹக்கீம், ஞானசீலன், ராமர், பவுன்ராஜ், மகேந்திரன், சங்கரபாண்டியன், மரியராஜ், கருப்பண்ணன், ராஜன், செல்வகுமார், சார்லஸ் முத்துப்பாண்டியன், பிரம்மா, தினகரன், மூர்த்தி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா கடந்த 4 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் பங்குனித்தேர்த் திருவிழா கடந்த 4 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று மாலை 6.30 மணிக்கு முப்புடாதி அம்மன் வழிபாடு குழுவினரின் பஜனை மற்றும் ஆயிரத்தி 8 திருவிளக்கு பூஜை நடந்தது.

    2-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, 3-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக பட்டிமன்றம், 4-ம் நாள் இரவு 8 மணிக்கு மெல்லிசை கலந்த நவீன வில்லிசை 5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

    6-ம் நாள் மாபெரும் நகைச்சுவை மற்றும் இசைபட்டிமன்றம், 7-ம் நாள் இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு ஒரு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா, தொடர்ந்து காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம் நடந்தது.

    தேரோட்டம்

    8-ம் நாள் இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. 9-ம் நாளான நேற்று முன்தினம் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது.

    பிற்பகல் 4 மணிக்கு தேர் ரதத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி கிழக்கு ரத வீதி, தெற்கு ரதவீதி வழியாக சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவில் வந்து அடைந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் 7 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு தேர் நிலைக்கு நிற்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடந்தது.

    10-ம் நாளான நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்தல் நடந்தது. அங்கு அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் விசேஷ பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்.

    சுரண்டை:

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் சுரண்டையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், சாந்தி தேவேந்திரன், பூக்கடை முருகன், மாணிக்கம், கஸ்பா செல்வம், ஜெயச்சந்திரன், ஆட்டோ செல்வராஜ், கந்தையா, ஆனந்த், கோபி கணேசன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் காந்திமதி, புஷ்பவல்லி, சண்முகசுந்தரி, சக்தி முப்புடாதி, சீதாலட்சுமி, வேலம்மாள், கவுன்சிலர் மேரி, பாரிசா, முத்துச்செல்வி, மைனர் சுவாமிதாஸ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி நாடார் எம்.எல்.ஏ. பேசுகையில், மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வஞ்சிக்கும் விதமாகவும், அதானி, அம்பானி சம்பாதிக்கவும்,அவர்கள் லாபத்தை அதிகரிக்கவும் சமையல் எரிவாயு விலையை அடிக்கடி உயர்த்தி கொண்டே செல்கின்றது மத்திய அரசு. அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அனைத்து பொருட்கள் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

    மத்திய அரசு பணக்கார ர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த பொழுதே கடந்த காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்காக மிக குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயுவை விற்பனை செய்தது. அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் பெட்ரோல்,டீசல் மற்றும் கியாஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைத்து, ஏழை மக்கள் வாழ்வு உயர வழிவகை செய்யப்படும் என பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் இப்பகுதி பள்ளியில் பயிலும் 3,500 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தாயார்தோப்பு மற்றும் வயல்களில் வேலை பார்க்க செல்பவர்கள். அந்த வழியில் வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நகராட்சி சேர்மன் பங்களாச்சுரண்டை பகுதியில் மின் மயானம் அமைக்கப்படாது எனவும் சுரண்டை நகராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்காமல் அமைக்கப்படாது என உறுதியளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சின்னத்தாய் வாழ்த்துரை வழங்கினார். கவுரவ விரிவுரையாளர் ராஜதுரை வரவேற்றார்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி விழாவில் பேசியதாவது:-

    நான் கிராமப் பகுதியில் இருந்த கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையில் படித்தேன். இன்று இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளேன். அதுபோல் நீங்களும் உயர வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியாளர் மட்டுமே உயர்ந்த படிப்பு அல்ல .சிவில் சர்வீஸ் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பட்டப் படிப்பு படித்தால் மட்டுமே போதும். நாம் எந்தவிதமான படிப்பை படித்தாலும் அதில் திறமையாக படித்து, உங்கள் கல்லூரி மற்றும் ஊரில் உள்ள நூலகங்களை பயன்படுத்தினால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம், நீங்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக உயர வேண்டும் என்பது எனது விருப்பம்.

    மேலும் இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டத்தில் விரைவில் தொழில் நுட்ப பூங்கா அமைய இருக்கிறது. எனவே அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து வேலை வாய்ப்பு குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர்,தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ஜார்ஜ் பிராங்கிளின் ஆகியோர் சிறப்புரையாற்றினார். வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, துணை தாசில்தார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மார்த்தாண்ட பூபதி நன்றி கூறினார்.

    • புளியரையில் உள்ள பள்ளியில் பாரம்பரிய வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
    • இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து 6 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சுரண்டை:

    இந்திய தற்காப்பு கலைகளை வளர்க்கும் பள்ளியின் சார்பாக புளியரையில் உள்ள பள்ளியில் பாரம்பரிய வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பம் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் 25 பள்ளிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து 6 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் பரிசை ஒருவரும், இரண்டாம் பரிசை 3 பேரும், மூன்றாம் பரிசை 2 மாணவர்களும் பெற்றனர். பள்ளி முழுமைக்கான கேடயத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல் வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாாிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர்.
    • சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    சுரண்டையில் பொதுநல மன்றம் மற்றும் சமூகநல இயக்கம் சார்பில் காம ராஜர் மார்க்கெட் வணிக வளாகத்தில் 4-வது புத்தகத் திருவிழா, கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

    சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜர்,சமூக ஆர்வலர் தொழிலதிபர் ரத்தினசாமி, சுரண்டை கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தாசில்தார் தெய்வசுந்தரி, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் கணேசன், சேர்மச் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம் அறிவியல் இயக்க சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 48 அரங்குகளும், 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தலைப்புகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் இடம் பெற் றுள்ளன.

    கண்காட்சியில் தினமும் பொது அறிவு போட்டி, வாசிப்பு திறன் ஊக்குவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி வினாடி-வினா,சதுரங்க போட்டி, ஓவிய போட்டி, பெண் ஆளுமைகளை கவுரவித்தல், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் ஏ.டி.என்.நடராஜன், ஆறுமுகசாமி, ஆசிரியர்கள் ஆரோக்கிய ராசு, ஜெயராம், சுரேஷ்குமார், சாதனா ரமேஷ், ஏ.டி.என் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், சாந்தி தேவேந்திரன்,சமுத்திரம்,வேல்முத்து,பேபிஜெசி,ரமேஷ்,பால்துரை மற்றும் பள்ளி,கல்லூரி பேராசிரியர்கள்,அரசு அதி காரிகள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நாளை பொட்டல் மாடசாமிக்கு இரவு 8மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 6-ந்தேதி காலையில் விக்னேஸ்வரா பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோமாதா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலையில் குற்றாலத்தில் இருந்து 61 குடத்தில் தீர்த்தம் எடுத்து வருதல், சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகுருநாதர் சமேத சிவகாமி அம்பாள் கோவிலில் குற்றால தீர்த்தம் அழைத்து பொட்டல் மாடசாமி கோவில் மேல தானங்கள் முடங்க ஊர் விளையாடி வந்து பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கால யாக பூஜை, விமான கலசம் பிரதேச தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நான்காம் கால பூஜை தீபாராதனை யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு பொட்டல் மாடசாமி கோவில் விமானம் அதனை தொடர்ந்து மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களும் கூடிய சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நேற்று இரவு அய்யாவழி அருள் இசை புலவர் சிவச்சந்திரன் வழங்கும் சிறப்பு ஆன்மிக கச்சேரி நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) பொட்டல் மாடசாமிக்கு இரவு 8மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு மகுட ஆட்டம் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் கமிட்டியாளர்கள் ஸ்ரீ பொட்டல் மாடசாமி குடும்ப த்தினர்கள், இளைஞர் அணி சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சுரண்டை அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சுரண்டை:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காததால் தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
     
    இந்த நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மண்டல செயலாளர் சித்திரைக்கனி தலைமையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கோரி வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது.

    இதில் கவுரவ விரிவுரையாளர்கள் ஹரிஹரசுதன், முருகன், அண்ணாமலை, ரமேஷ், சந்தனதேவி,  மாரிச்செல்வி, கார்த்திக், குமாரவேல், குழல்வாய்மொழி, ஷீபாஞானமலர், முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டு உள்ளது.
    சுரண்டை:

    சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் 400 மீட்டர் தடகளம், கால்பந்து, கோகோ, சிறப்பு கைப்பந்து பயிற்சி, கிரிக்கெட் வலைப்பயிற்சி ஆகிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மைதானத்தின் திறப்பு விழா கல்லூரி  கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பீர்கான் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குனர் மோகன கண்ணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை யாற்றினார். 

    இதில் துறை த்தலைவர்கள் ஜெயா, பரமார்த்த லிங்கம், மனோ ரஞ்சிதம், பிரேம் சந்தர், சக்தி, ராபின்சன், செல்வ கணபதி, சுந்தர், மதியழகன், தேசிய மாணவர் படை விஜய லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×