என் மலர்

  நீங்கள் தேடியது "public protest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
  • மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

  குன்னத்தூர் :

  அவிநாசி அருகே குன்னத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பூலாங்குளம் குடியிருப்பு பகுதி அருகே தனியாா் செல்போன் நிறுவனம், செல்போன் உயா் கோபுரம் அமைப்பதற்காக தனியாா் இடத்தில் பணிகளை தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

  இதையறிந்த அப்பகுதி மக்கள் உயா் கோபுரங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி குடியிருப்பு பகுதியில் உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மேலும் பேரூராட்சி நிா்வாகத்தினா், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.

  இருப்பினும் உயா்கோபுரம் அமைக்கும் பணி தொடர இருப்பதாக அறித்த அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்புக் கொடி போராட்டம் குறித்து தகவலறிந்த குன்னத்தூா் போலீசார் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதைத்தொடா்ந்து செல்போன் உயா் கோபுரம் அமைக்க அனுமதி அளித்த தனியாா் இடத்தினா் அந்த முடிவைக் கைவிட்டனா். இதையடுத்து கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலாற்றில் இருந்து ஏரிக்கு 30 அடி அகலம் கால்வாய் செல்கிறது
  • 2 அடி கட்டிடத்தை மட்டும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்

  வாணியம்பாடி:

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் காயிதே மில்லத் தெரு வழியாக பாலாற்றில் இருந்து ஏரிக்கு 30 அடி அகலம் கால்வாய் செல்கிறது.

  இந்த கால்வாய் ஒட்டி உள்ள நத்தம் புறம்போக்கு இடத்துடன் 2 அடி கால்வாய் இடம் ஆக்கிரமிப்பு செய்து கடந்த 2014 -15 ஆம் ஆண்டு ரூ.4 லட்சம் 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி உள்ளனர்.

  இதில் 38 குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி கட்டிடத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதும், மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பாடம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் 2 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டியுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 2 அடி கட்டிடத்தை மட்டும் அகற்ற வேண்டும்.

  இல்லையென்றால் மாற்று கட்டிடத்தை வழங்கி முழுமையாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் பேரில் கட்டிடம் இடிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டு பொக்லைன் எந்திரத்தை அனுப்பிய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.
  • பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினரும் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

  வீரபாண்டி :

  திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பலஆண்டுகளாக போராடி தற்பொழுதுதான் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆலங்காடு கடைசி வீதி மேடு பகுதியாக உள்ளதால் கழிவு நீர் செல்ல ஏதுவாக தனியார் இடத்தின் வழியாக குழாய் அமைத்து கழிவுநீரை கொண்டு செல்ல மாநாகராட்சி மூலம் முடிவு செய்து அதற்கான பணிகளும் நேற்று தொடங்கியது.

  பொக்லைன் எந்திரம் மூலமாக குழாய் பதிக்க குழி தோண்டிய போது இதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நடுவே நிறுத்தினார்கள். இதனால் பணி நிறுத்தப்பட்டது.இதனால் அப்பகுதி பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் தலைமையில் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

  இடையூறாக நிறுத்திய வாகனங்களை எடுத்து செல்லமுடியாத அளவிற்கு பொதுமக்களும் தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் உடனடியாக வாகனங்களை எடுத்து பணி செய்யவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.இதனை தொடர்ந்து வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக எடுத்தார்கள். பின்பு பணி தொடங்கியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
  • இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்றனர்.

  பல்லடம் :

  பொங்கலூர் அருகே அலகுமலையில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு கொடி கம்பம் மற்றும் தேர் ஆகியன நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போதைய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவராக இருந்த முருகன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் இருபுறமும் நுழைவாயில் அமைக்கப்பட்டது.

  அந்த நுழைவாயில் பகல் நேரங்களில் திறக்கப்பட்டும், இரவு நேரங்களில் பூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலின் அருகே உள்ள கேட் நிரந்தரமாகவும் மூடப்பட்டது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தது. அதன் பின்னர் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது அந்த கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நேற்று கம்பி வேலி அகற்றும் போராட்டம் மற்றும் தலித் மக்களின் 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை மீட்கும் போராட்டம் என போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து நேற்று கோயிலுக்கு சம்பந்தப்பட்ட பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். இதன் காரணமாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், அவிநாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர் மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோரும் வந்தனர்.

  போராட்டம் அறிவித்த தரப்பினரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிசெல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி. கலையரசன், பல்லடம் தொகுதி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தரப்பில், இந்த கம்பி வேலியை முழுமையாக அகற்ற வேண்டும், பொதுமக்கள் சென்று வர எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது என்பதே எங்களது கோரிக்கை. மேலும் கோயிலின் அருகில் உள்ள கேட்டையும் திறந்து விட வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் திங்கட்கிழமை அமைதி பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அதுவரை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கோயில் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ஏற்கனவே 2010 முதல் என்ன நடைமுறை அறிவிக்கப்பட்டதோ அது அப்படியே தொடர வேண்டும். இதில் எந்த விதமான மாறுதலும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலப்பதாக போராட்டம் நடைபெற்றது.
  • சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வடக்கு தெரு ,மாசிலாமணி பேட்டை,முகமதியார் தெரு உள்ளிட்ட தெருக்களை உள்ளடக்கியது 9-வதுவார்டு.

  இப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதாகவும் கழிவுநீர்கள் இக்குழாய் வழியாக வந்து குடிநீர் கலப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியிருப்பு வாசிகள் அப் பகுதி கவுன்சிலர் வக்கீல் ராதிகாவிடம் முறையிட்டனர்.

  இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் முறையிடுவதாக தெரிவித்திருந்தனர் கவுன்சிலர் அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்ராதிகா தலைமையில் பொதுமக்கள் குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

  சம்பவத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை தொடர்ந்துகவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதான ரோட்டில் மதுக்கடை செயல்பட்டால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
  • மதுக்கடை அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், கோவிலும் உள்ளது.

  உடுமலை :

  உடுமலை கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை தொடங்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து, கண்ணமநாயக்கனூர், ஆண்டியகவுண்டனூர் கிராம மக்கள் சார்பில் திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து கல்லாபுரம் செல்லும் ரோட்டில், கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரதான ரோட்டில் மதுக்கடை செயல்பட்டால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அப்பகுதியில்விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவ்வழியாகவே நாள்தோறும் சென்று வர வேண்டும்.

  கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. புதிதாக மதுக்கடை துவங்க திட்டமிடப்பட்ட இடத்துக்கு அருகில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், கோவிலும் உள்ளது. அருகிலேயே கல்லாபுரம் பிரதான ரோடு அமைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

  எனவே கிராம மக்கள் வாழ்வாதாரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில், புதிதாக டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கூடாது.இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இரு கிராம மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆதம்பாக்கத்தில் நாங்கள் ஏரி் இடத்தில் வீடு கட்டவில்லை் என்று கூறி வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு கொடுத்து அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிமலை போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

  ஆலந்தூர்:

  ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமா பந்தி சிறப்பு முகாம் தாசில்தார் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் வருவாய் கோட்ட அலுவலர் சாய் வர்த்தினி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

  அப்போது ஆதம்பாக்கத்தில் உள்ள மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுப்பணி துறையினர் இடிக்கக்கூடாது. நாங்கள் ஏரி் இடத்தில் வீடு கட்டவில்லை் என்று கூறி வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு கொடுத்து அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிமலை போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
  ஜெயங்கொண்டம்:

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அனுமார் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக அந்த பகுதிக்கு மின்சாரம் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 2 முறை புகார் மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கச்சிராயபாளையம் அருகே இன்று காலை குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்ஸை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  கச்சிராயபாளையம்:

  விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள மணியார் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு 7 கிராமங்கள் உள்ளன.

  இந்த கிராமத்தில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மலை வாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

  இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

  இதில் மணியார் பாளையம் பகுதியில் உள்ள மின்மாற்றி ஒன்று மின்னல் தாக்கி சேதமடைந்தது.

  மின்மாற்றி பழுதானதால் அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

  இதனால் அந்த பகுதி பொது மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வனபகுதியில் உள்ள நீரோடைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர்.

  மின்மாற்றி பழுதானதால் அந்த பகுதியில் மின்சாரம் இன்றி கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.

  இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .

  இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று காலை 7.30 மணி அளவில் காலி குடங்களுடன் மணியார் பாளையம் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இது குறித்து தகவல் அறிந்த கல்வராயன் மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதாகி உள்ளதால் எங்கள் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. எங்களுக்கு குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். எனவே மின்மாற்றியை சீரமைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

  அதற்கு போலீசார் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மின்மாற்றி சீரமைக்கப்படும். மேலும் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் இருந்து ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள பூமலூர் ஊராட்சியில் உள்ளது நடுவேலம்பாளையம் கிராமம். இங்கு 700-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்திக்கடவு குடிநீர் குழாய் முலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நடுவேலம் பாளையம்-பல்லடம் ரோட்டில் காலிக் குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  இந்த தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் மற்றும் பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரை மணி நேரமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே ஓடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலுக்கு முயன்ற மக்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஓடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பாத்திமா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டீச்சர்ஸ் காலனி, சவேரியார் பாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு ஆகியவை இந்த பகுதியில் சேர்வதால் எங்களுக்கு பல வித நோய்கள் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தனர்.

  எனவே ஓடை அமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தி இன்று மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  மக்களை பாதிக்கும் எதனையும் செயல்படுத்தமாட்டோம் என்று கூறி ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையை மணல் கொண்டு மூடினர். இதனால் மறியலுக்கு முயன்ற மக்கள் கிளம்பிச் சென்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo