search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் - கலெக்டர் ரவிச்சந்திரன் பேச்சு
    X

    கருத்தரங்கில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசிய காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் - கலெக்டர் ரவிச்சந்திரன் பேச்சு

    • சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சின்னத்தாய் வாழ்த்துரை வழங்கினார். கவுரவ விரிவுரையாளர் ராஜதுரை வரவேற்றார்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி விழாவில் பேசியதாவது:-

    நான் கிராமப் பகுதியில் இருந்த கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையில் படித்தேன். இன்று இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளேன். அதுபோல் நீங்களும் உயர வேண்டும். மருத்துவம் மற்றும் பொறியாளர் மட்டுமே உயர்ந்த படிப்பு அல்ல .சிவில் சர்வீஸ் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பட்டப் படிப்பு படித்தால் மட்டுமே போதும். நாம் எந்தவிதமான படிப்பை படித்தாலும் அதில் திறமையாக படித்து, உங்கள் கல்லூரி மற்றும் ஊரில் உள்ள நூலகங்களை பயன்படுத்தினால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம், நீங்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக உயர வேண்டும் என்பது எனது விருப்பம்.

    மேலும் இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டத்தில் விரைவில் தொழில் நுட்ப பூங்கா அமைய இருக்கிறது. எனவே அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து வேலை வாய்ப்பு குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர்,தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ஜார்ஜ் பிராங்கிளின் ஆகியோர் சிறப்புரையாற்றினார். வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, துணை தாசில்தார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மார்த்தாண்ட பூபதி நன்றி கூறினார்.

    Next Story
    ×