search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhisheka Vizha"

    • உடன்குடி வைத்திய லிங்கபுரம் விஸ்வபிரம்ம உச்சினிமாகாளி அம்பாள், பட்டறை அம்பாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது.
    • தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், பகல் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி வைத்திய லிங்கபுரம் விஸ்வபிரம்ம உச்சினிமாகாளி அம்பாள், பட்டறை அம்பாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது.

    இதையொட்டி முதல் நாள் அனுக்ஜை, திருமுறைப் பாராயணம், விநாயகர் வழிபாடு, லட்சுமி கணபதி பூஜை, 2-ம் நாள் அதிகா லையில் மங்கள இசை, திருமுறைப் பாராயணம், விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை, நவக்கிரக வேள்வி, ருத்ர, துர்கா ஹோமம், கோ பூஜை, பிரசன்னாபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெற்றது. 3-ம் நாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வகை யான யாக சாலை பூஜைகள், வேத மந்திரஜெபங்கள், கன்யா பூஜை, சுமங்க- பூஜை நடைபெற்றது.

    4-ம் நாள் அதிகாலையில் 4-ம் கால யாகசாலை பூஜை கள், காலை 8 மணிக்கு யாக சாலை பூஜையில் இருந்து கடம் புறப்பாடு, யாத்ரா தானத்தை தொடர்ந்து கோவில் கோபுர ங்களுக்கு விமான கும்பாபி ஷேகம், உச்சினிமாகாளி அம்பாள், ஸ்ரீபட்டறை அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், பகல் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர்கமிட்டி தலைவர் வேல்ராஜ், துணைத்தலைவர் கிருஷ்ண மந்திரம், செயலர் கணேசன், துணை செயலர் ஹரிஹர அய்யப்பன், பொருளாளர் சிவமுருகன், கமிட்டி உறுப்பினர்கள் சொக்கலிங்கம், வாசுபாலன், முருகேசன், வள்ளி நாயகம், சிவபெருமாள், பேச்சிமுத்து, பெரியசாமி, உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் மலைச் செல்வம், சித்திரைசெல்வம், வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

    • சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நாளை பொட்டல் மாடசாமிக்கு இரவு 8மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 6-ந்தேதி காலையில் விக்னேஸ்வரா பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோமாதா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலையில் குற்றாலத்தில் இருந்து 61 குடத்தில் தீர்த்தம் எடுத்து வருதல், சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகுருநாதர் சமேத சிவகாமி அம்பாள் கோவிலில் குற்றால தீர்த்தம் அழைத்து பொட்டல் மாடசாமி கோவில் மேல தானங்கள் முடங்க ஊர் விளையாடி வந்து பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கால யாக பூஜை, விமான கலசம் பிரதேச தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நான்காம் கால பூஜை தீபாராதனை யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு பொட்டல் மாடசாமி கோவில் விமானம் அதனை தொடர்ந்து மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களும் கூடிய சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நேற்று இரவு அய்யாவழி அருள் இசை புலவர் சிவச்சந்திரன் வழங்கும் சிறப்பு ஆன்மிக கச்சேரி நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) பொட்டல் மாடசாமிக்கு இரவு 8மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு மகுட ஆட்டம் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் கமிட்டியாளர்கள் ஸ்ரீ பொட்டல் மாடசாமி குடும்ப த்தினர்கள், இளைஞர் அணி சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    ×