search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Brain Cancer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுவன் தமிழ்ச்செல்வன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
  • அமைச்சரிடம், சிவபத்மநாதன் பேசி சிறுவனின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

  சுரண்டை:

  தென்காசி மாவட்டம்,சுரண்டை அருகே உள்ள மேலராஜகோபாலபேரி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. தொழிலாளி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12) இந்த சிறுவன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

  இதனால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தன்னிடம் பணம் இல்லை எனவும், தனது மகனின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் சிறுவனின் தந்தை குருசாமி கோரிக்கை வைத்தார்.

  அதனையேற்று சிறுவனின் மருத்து செலவுக்கு சிவபத்மநாதன் ரூ.5 ஆயிரம் வழங்கினார்.தொடர்ந்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி சிறுவனின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, யூனியன் சேர்மன்கள் காவேரி சீனித்துரை, திவ்யா மணிகண்டன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சேசுராஜன்,பொதுக்குழு உறுப்பினர் அருள்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன்,செல்லத்துரை , குமார், டோம்னிங், கண்ணன். கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்போனில் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து பேசினால் 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. #CellPhone #BrainCancer
  புதுடெல்லி:

  செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மின்கதிர்வீச்சு பேராசிரியர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  நாம் பயன்படுத்தும் செல்போனுக்காக லட்சக்கணக்கான செல்போன் கோபுரங்கள் மற்றும் வீடுகள் தோறும் இணைக்கப்பட்டுள்ள வை-பை போன்றவை 24 மணி நேரமும் கதிர்வீச்சுகளை வெளியேற்றுகின்றன. அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனிதர்களை மிகவும் பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 1985-ம் ஆண்டு செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை நடந்த ஆய்வில் மூளை புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து மக்களிடம் அதிகரித்து வருகிறது என ஆய்வில் தெரியவருகிறது.  பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் குழந்தைகள் 12 வயது வரை செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது என பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகி உள்ளது. #CellPhone #BrainCancer

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மூளை புற்றுநோயால் உயிருக்கு போராடும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு அவரது மனைவி முறையான சிகிச்சை அளிக்கவில்லை என அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.
  போரூர்:

  சென்னையை அடுத்த ஆவடி பருத்திபட்டில் வசித்து வருபவர் சாம் பிரிய குமார் (59). போலீஸ் துறையில் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி வகித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓய்வுபெற்றார். பணியில் இருந்தபோது இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

  அவருக்கு மூளை புற்றுநோய் இருப்பது மருத்துவரால் கண்டறியப்பட்டது. பல்வேறு கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நோயின் தீவிர தன்மை முற்றிலும் பரவியது. அவரது மனைவி ஜெயா மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

  இந்தநிலையில் சாம் பிரியகுமாரின் தங்கை ஷீலா எபிநேசர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறிஇருப்பதாவது:-

  நான் அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியில் வசித்து வருகிறேன். எனது சகோதரர் சாம் பிரியகுமார் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். அவரை மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

  இதையடுத்து உதவி கமி‌ஷனர் சிவகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். திருமங்கலம் போலீசார் ஏ.டி.எஸ்.பி. வீட்டிற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

  விசாரணையில் ஏ.டி.எஸ்.பி. குடும்பத்திற்கும் புகார் கொடுத்துள்ள சகோதரி குடும்பத்துக்கும் 30 வருடமாக பேச்சுவார்த்தை கிடையாது என தெரியவந்தது. குடும்ப காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பிரச்சனையை இப்போது ஏற்படுத்தி வருவதாக ஏ.டி.எஸ்.பி. மனைவி ஜெயா தெரிவித்துள்ளார்.

  அவர் மேலும் கூறும் போது, என் கணவரை காப்பாற்ற ஒரு மனைவிக்கு இல்லாத அக்கறையா? 30 வருடமாக பேசாத இவருக்கு திடீரென என் கணவர் மீது பாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. என் கணவர் உயிரை காப்பாற்ற போராடி வருகிறேன். மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். கடவுள் ஒருவரைத்தான் நம்பி இருக்கிறேன். அவர் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரால் நடக்க முடியாது. எல்லா பணிவிடைகளையும் அருகில் இருந்து நான் செய்து வருகிறேன் என்றார்.
  ×