என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயின்"
- 'சாந்தாரா' என்பது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு ஜெயின் மத துறவு சடங்காகும்.
- சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார்.
ஐடி நிபுணர்களான பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயின் ஆகியோரின் ஒரே மகளான வியானாவுக்கு, கடந்தாண்டு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் அந்த 3 வயது குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சையில் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஜெயின் மத நம்பிக்கையின் மீது அக்குடும்பத்தின் கவனம் திரும்பியது
மார்ச் 21 அன்று, இந்தூரில் உள்ள ஆன்மீகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை குழந்தையின் குடும்பம் சந்தித்தது. அப்போது இக்குழந்தைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 'சாந்தாரா' வழங்கப்பட்டது. இது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு மத துறவு சடங்காகும்.
சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார். மூன்று வயது குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததால் விரைவிலேயே அக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது
இது தொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின், "எங்கள் மக்களுக்கு 'சாந்தாரா'வை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை, ஆனால் குருஜி அவளுடைய நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி அதை பரிந்துரைத்தார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்" தெரிவித்தார்.
இதன்மூலம் மிக குறைந்த வயதில் 'சாந்தாரா' சபதம் எடுத்த நபர் என்று உலக சாதனை புத்தகத்தில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளி உலகத்திற்கு இது தெரியவந்துள்ளது.
வியனாவுக்கு 50 வயது முதியவருக்கு இணையான மதப் புரிதல் இருந்தது என்று ராஜேஷ் முனி மகாராஜ் கூறினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் 100க்கும் மேற்பட்டோர் 'சாந்தாரா' சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நெட்டிசன்கள் மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள் என்று அக்குடும்பத்தையும் இந்த ஜெயின் மத சடங்கையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
2015 ஆகஸ்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 'சாந்தாரா' சடங்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்கு சமம் என்று கூறி இதனை சட்டவிரோதமாக அறிவித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உடனடியாக அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- பக்ரீத் அன்று ஆடுகள் விற்பனை களைகட்டும்.
- பக்ரீத் அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் முடிவு செய்தனர்.
டெல்லியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மட்டுமில்லாமல் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் ஆட்டை வெட்டி பிரியாணி செய்து அனைவருக்கும் பகிர்ந்து அழிப்பார். அதனால் ஆடுகள் விற்பனை அப்போது களைகட்டும்.
டெல்லியில் நடைபெற்ற ஆடுகள் விற்பனையில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் வசித்து வரும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகை அன்று வெட்டப்படும் ஆடுகளை காப்பாற்ற முடிவு செய்தனர். அவர்களால் எல்லா ஆடுகளையும் காப்பாற்ற முடியாது என்று தெரிந்திருந்தும் முடிந்த அளவு ஆடுகளை காப்பாற்றலாம் என்று முடிவு செய்து நிதி திரட்ட ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட 15 லட்சம் நிதி திரட்டியவர்கள், முஸ்லிம் போல வேடமிட்டு 124 ஆடுகளை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன் மூலம் 124 ஆடுகளின் உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்று ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.
தற்போது வாங்கிய 124 ஆடுகளை என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் முழித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தினரின் இந்த செயலை சிலர் பாராட்டினாலும், பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.






