சுரண்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா-சிவபத்மநாதன் பங்கேற்பு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார்.
சுரண்டையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கட்சி கொடி ஏற்றியபோது எடுத்தபடம்.
சுரண்டையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கட்சி கொடி ஏற்றியபோது எடுத்தபடம்.
Published on

சுரண்டை:

சுரண்டை நகர தி.மு.க. சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

மாநில விவசாய அணி அப்துல் காதர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுரண்டை நகராட்சி பகுதியில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து மரக்கன்றுகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com