சுரண்டையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி முதல்வர் சின்னதாய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் கல்லூரி முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
பேரணியில் கல்லூரி முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
Published on

சுரண்டை:

சுரண்டையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை மற்றும் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சந்திரவேலு, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய் ஆய்வாளர் கண்ணன் வரவேற்று பேசினார் . சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் சின்னதாய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் வாக்குசாவடி பணியாளர்கள் வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணி வந்தனர். வி.ஏ.ஓ.க்கள் ராதாகிருஷ்ணன்,

ராஜலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன், கல்லூரி பேராசிரியர்கள் மனோரஞ்சிதம், திருநாவுக்கரசு, பிரான்ஸிஸ் ஆபிரகாம், சேர்மன், அமலா ராணி, பழனிகனி, மகாலட்சுமி, மதியழகன், சாந்தி அகடமி ரமேஷ், கிராம உதவியாளர்கள் மாரியம்மாள், கற்பகம், கலா, மங்களம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com