என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு
    X

    சுரண்டை நகராட்சி பகுதியில் சுகாதார பணிகளை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், டாக்டர் ராஜ்குமார், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

    சுரண்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகராட்சி தலைவர் வள்ளி முருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும் உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் சக்திவேல் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், கமிஷனர் முகமது சம்சுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் சுரண்டை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதார பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.

    Next Story
    ×