என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் குடோனில் பதுக்கிய  153 கிலோ புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது
    X

    புகையிலையுடன் சிக்கிய அந்தோணி செல்வம்.


    சுரண்டையில் குடோனில் பதுக்கிய 153 கிலோ புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது

    • அந்தோணி செல்வம் என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரித்தனர்.
    • பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி தலைமையிலான போலீசார் நேற்று அச்சங்குன்றம் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    புகையிலை

    அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணி செல்வம்(வயது 46) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர்.

    அப்போது அதில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அவரை சோதனை செய்ததில் புகையிலை விற்ற பணம் ரூ.23 ஆயிரம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    கைது

    தொடர்ந்து அந்தோணி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அச்சங்குன்றம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர்(38) என்பவருக்கு சொந்தமான குடோனில் புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும் சந்திரசேகரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×