என் மலர்
நீங்கள் தேடியது "government college"
- கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது.
- கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லையில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஆரம்பத்தில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்தது,
பின்னர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கல்லூரிக்கு என்ற தனி இடத்தை தேர்வு செய்து, கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரசு கல்லூரியாக மாறியது. அரசு கல்லூரியாக மாறிய பின்பு, கல்லூரி கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டண தொகை 17 மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்தது.
மின்சார வாரியம், பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பை துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மின் கட்டண தொகை அதிகமான நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நன்னிலம் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் நன்னிலம் அரசு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கவுரவ பேராசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தரப்பட்ட மின்னிணைப்பு, மின் கட்டண பாக்கியை துண்டிக்கப்பட்டது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போட்டியில் சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது.போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்றார். இந்த போட்டியில் 27 பள்ளிகள் மற்றும் கிளப்களில் இருந்து சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை, லயன்ஸ் கிளப் ,தேஜஸ் ரோட்டரி இணைந்து செய்திருந்தனர்.
- போதை பொருட்களால் வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.
- பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
பல்லடம் :
பல்லடம் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம், ரோட்டரி பல்லடம் ரெயின்போ சங்கம், ஆகியவை இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கமலம் வரவேற்றார்.
கருத்தரங்கில், பல்லடம் எஸ்.வி.கிளினிக் தலைமை டாக்டர் பாலமுரளி கலந்துகொண்டு பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். எனவே போதை பொருட்களை தவிர்த்து விடுங்கள்,மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், போதை பழக்கத்தில் இருந்தால், அவரை திருத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' என ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
- 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.
- முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இளநிலை பாடப்பிரிவுகளில் 864 இடங்கள் உள்ள நிலையில் முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.
இதற்கான கலந்தாய்வு வாயிலாக 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 12 விளையாட்டுத்துறையைச்சேர்ந்த மாணவர்கள், ஒரு தேசிய மாணவர் படையைச்சேர்ந்த மாணவர் என, மொத்தம் 18 பேர் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதளத்தை பார்வையிடலாம்.அதேபோல, தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை கலந்தாய்வுக்கு உரிய குறுஞ்செய்தி அவரவர் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த தகவலை, கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.
- 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை.
- 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பல்லடம் :
பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 3,300 பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் முனியன் தெரிவித்தார்.
- விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல் கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 8-ந் தேதி தொடங்கி , 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
- விபரங்களை கல்லுாரி இணையதளமான tkgac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கடலூர்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வர் ராஜவேல் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
, 2022- 23ம் கல்வியாண்டில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, வருகிற 8-ந் தேதி தொடங்கி , 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 8ம் தேதியன்று சிறப்பு பிரிவினருக்கும், 10-ந் தேதி சுழற்சி 1, அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகியவற்றுக்கும் நடக்கிறது. 11-ந் தேதி காலை சுழற்சி 2ல் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல் மற்றும் சுழற்சி 1, வணிக நிர்வாகம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், மாலையில் சுழற்சி 2, வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், 12-ந் தேதி வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 13-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் அனைத்து ஆவணங்களின் அசல், அதன் 3 நகல்கள், 3 புகை ப்படங்கள் மற்றும் சேர்க்கை கட்டணம் ஆகிவற்றை கொண்டுவர வேண்டும். மேலும் தரவரிசை மற்றும் சேர்க்கை விபரங்களை கல்லுாரி இணையதளமான tkgac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்ப ட்டுள்ளது.
- கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது
- 170 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
கோவை:
தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.
நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.
இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்ப ங்களை சமர்ப்பிக்க 7-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட் டுள்ள நிலையில், நேற்றும் பலர் விண்ணப்பித்தனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு நேற்று வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்ட 170 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
- புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு வில் கூறியுள்ள தாவது,:-
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போதிய வசதி இன்றி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
- பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.
ஊட்டி:
தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.
மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் டைடல்பார்க் அமைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்விக் கடன் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்வது என்பது குறித்தும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்வி, வணிகம் மற்றும் கணக்கு பதிவியல், சட்டம் ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
எனவே பிளஸ்-2 முடித்த மாணவா்கள் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கல்வி வல்லுநா்களால் தெரிவிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முழுமையாக கவனித்து, தங்களது கனவினை நனவாக்கும் வகையில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், ராம்குமாா், சுனிதா நேரு, கீா்த்தனா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் புனிதா அந்தோணியம்மாள், சுடலை மற்றும் கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
- திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் 2,200 மாணவ மாணவிகளுக்கு பட்டம் - அமைச்சர் பொன்முடி வழங்கினார்
- அமைச்சர் பொன்முடி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 3-வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், ரவிக்குமார், எம்.பி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நாக லட்சுமி வரவேற்றார்.
விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு 2013 -2020 வரை பயின்ற 2200 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்
விழாவில் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பராஜ், கல்லூரிகள் கல்வியியல் இணை இயக்குநர் மகாவேரி அம்மாள், பதிவாளர் விஜயராகவன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், யூனியன்தலைவர் ஓம்சிவசக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய பொரு ளாளர் கிருஷ்ண மூர்த்தி ஒன்றிய குழு துணை தலைவர் கோமதிநிர்மல்ராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி யின் அனைத்து துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் 25 வது ஆண்டு தலைவராக சுசான்லி டாக்டர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது.
கடலூர்:
புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் ரிசர்ச் சென்டரின் 25 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது. விழாவிற்கு தி சுசான்லி குழுமத்தின் சேர்மனும், கவுன்சிலின் நிறுவனத் தலைவருமான டாக்டர் ரவி தலைமை தாங்கினார். இதில் 25-ம் ஆண்டின் தலைவராக தி சுசான்லி குரூப்ஸின் சேர்மன் டாக்டர் ரவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக ராஜலிங்கம் , பொருளாள ராக அனந்தகிருஷ்ணன், உதவி தலைவராக மனோஜ், இணைபொருளாளராக கிருஷ்ணசிவசலபதி, இணை செயலாளர்களாக சுந்தரமூர்த்தி மற்றும் நெல்லை ஆசுகவிநவநீதகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக புகழேந்தி, பீலிப்ராஜ்ரவி, சாராதாஸ்ரீ, சுகன்யா, அசோக்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேராசிரியை டாக்டர் உஷாரவி " பிரைன் ஃபாக் " என்ற டிங் ஜாங் புராஜக்ட் 2-வது முறையாக தொடங்கினார். புதிய நிர்வாகிகள் பொறுப்பு பெற்றவுடன் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மண்டல உதவி தலைவர்கள் மற்றும் உயர்மட்டக்குழு ஆகியவற்றை டாக்டர் ரவி அறிவித்தார். உயர்மட்டக் குழுவின் தலைவராக தி சுசான்லி குழும இணை இயக்குனர் பேராசிரியை டாக்டர் உஷாரவி , இணை தலைவராக அறிவழகன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசு அக்குபஞ்சர் நிபுணர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும். அக்குபஞ்சர் அறிவியல் ஆய்விற்கென தனிநிதி ஒதுக்க வேண்டும். பட்டம், பட்டயம் போன்ற அக்குபஞ்சர் பயிற்சியினை அரசு கல்லூரிகளில் துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் நிபுணர்கள் பங்கேற்றனர். முடிவில் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (எஸ்.சி, எஸ்.டி.) மாணவ- மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. மற்ற பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பத்தினை வாங்கி சென்றனர். மாணவர் சேர்க்கை குழுவை சேர்ந்த பேராசிரியர்- பேராசிரியைகள் விண்ணப்பத்தினை வழங்கினார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் பட்டமேற்படிப்பு அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூலை 11-ந் தேதியும், அதனை தொடர்ந்து 12-ந் தேதி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு ஆகிய கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறுகிறது. பட்டமேற்படிப்புக்கான படிப்புகளில் மொத்தம் 337 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.