search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    17 மாதமாக மின் கட்டணம் செலுத்தாததால் நன்னிலம் அரசு கல்லூரியில் மின் இணைப்பு துண்டிப்பு
    X

    17 மாதமாக மின் கட்டணம் செலுத்தாததால் நன்னிலம் அரசு கல்லூரியில் மின் இணைப்பு துண்டிப்பு

    • கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது.
    • கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லையில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஆரம்பத்தில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்தது,

    பின்னர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கல்லூரிக்கு என்ற தனி இடத்தை தேர்வு செய்து, கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரசு கல்லூரியாக மாறியது. அரசு கல்லூரியாக மாறிய பின்பு, கல்லூரி கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டண தொகை 17 மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்தது.

    மின்சார வாரியம், பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பை துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மின் கட்டண தொகை அதிகமான நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நன்னிலம் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் நன்னிலம் அரசு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதனால் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கவுரவ பேராசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தரப்பட்ட மின்னிணைப்பு, மின் கட்டண பாக்கியை துண்டிக்கப்பட்டது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×