search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் விரைவில் அரசு கல்லூரி தொடங்கப்படும்-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
    X

    குன்னூரில் விரைவில் அரசு கல்லூரி தொடங்கப்படும்-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

    • பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

    விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.

    மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் டைடல்பார்க் அமைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்விக் கடன் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்வது என்பது குறித்தும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்வி, வணிகம் மற்றும் கணக்கு பதிவியல், சட்டம் ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

    எனவே பிளஸ்-2 முடித்த மாணவா்கள் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கல்வி வல்லுநா்களால் தெரிவிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முழுமையாக கவனித்து, தங்களது கனவினை நனவாக்கும் வகையில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், ராம்குமாா், சுனிதா நேரு, கீா்த்தனா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் புனிதா அந்தோணியம்மாள், சுடலை மற்றும் கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×