search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ramachandran"

    • தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
    • டாக்டர்கள் அவரது உடல் நலனை கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

    தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர்கள் அவரது உடல் நலனை கண்காணித்து வருகிறார்கள்.

    • அனைத்து இடங்களிலும் முறிந்து கிடக்கும் மரங்கள் இன்று மாலைக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் மழை நீரால் மூழ்கியுள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் போர்க்காள அடிப்படையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று காலை மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டு சென்னையை மழை வெள்ளம் மூழ்கடித்தது. அதைவிட தற்போது அதிக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் படிப்படியாக மின்சாரம் சீராகும். அனைத்து இடங்களிலும் முறிந்து கிடக்கும் மரங்கள் இன்று மாலைக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் மழை நீரால் மூழ்கியுள்ளது.

    சென்னையில் 8 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3500 மக்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாநராட்சி தெரிவித்துள்ளது.

    • 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.

    இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாக வாதம்.

    விருதுநகர்:

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார்.

    கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் 27ம் தேதியும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

    வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஷஜீவனா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையையும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வைகை அணை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு சுமார் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.

    சுற்றுலாத்துறை மக்களின் முக்கிய தேவையாக இன்றைய காலகட்டத்தில் மாறியுள்ளது. வேலைப்பளுவின் காரணமாக மன அமைதிக்கு ஓய்வு எடுக்கவும் மறுபடியும் ஊக்கத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுலா உதவுகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை மன அழுத்தத்தை போக்க சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

    கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை முடக்கி இருந்தது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது மீண்டும் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது.

    சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சாத்திக்கூறுகள் உள்ள சுற்றுலாத்தளங்களில் புதிய படகு சவாரிகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை திருவாரூரில் கலைஞர் கோட்டகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
    • தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாளை திருவாரூரில் கலைஞர் கோட்டகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.

    இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதேபோல் உலக அளவில் விளையாட்டு துறையை முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு ஓயாமல் உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது. அதுவும் மிகக் குறைந்த விலையில் உயர்தர மருத்துவம் கிடைக்கிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பண்டைய கால தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வருங்கால சந்ததியருக்கு மிகவும் பயனுள்ளதாக அருங்காட்சியகம் உள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை பூங்கா இன்னும் இரண்டு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஆய்வு செய்து சுற்றுலா துறைக்கு என்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தி.மு.க. சார்பில் பிரசார கூட்டம் நடந்தது.

    இந்த பிரசாரத்தின் போது தி.மு.க சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.

    இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணையும் நடைபெற்றது.

    மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ் இனியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது.

    ஊட்டி:

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது.

    மேலும் பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறை சாற்றுதல், குச்சி பிடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் வளர்க்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற கலைகளை வளர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வளரும்.

    அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக கொண்டுவர முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் 2019-20-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

    தமிழகத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது.
    • அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தி வந்தனர். இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி தலைமையிலான ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் கடந்த 26-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில், 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

    அப்போது காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது. அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    கொடநாடு வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சாட்சிகளை கலைத்தது போல் அந்த மரத்தை எஸ்டேட் ஊழியர்கள் வெட்டி உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதா என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, வனத்தில் வெட்டப்படும் மரங்கள் குறித்து வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். கொடநாட்டில் மரம் வெட்டப்பட்டதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

    விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.

    மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் டைடல்பார்க் அமைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்விக் கடன் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்வது என்பது குறித்தும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்வி, வணிகம் மற்றும் கணக்கு பதிவியல், சட்டம் ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

    எனவே பிளஸ்-2 முடித்த மாணவா்கள் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கல்வி வல்லுநா்களால் தெரிவிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முழுமையாக கவனித்து, தங்களது கனவினை நனவாக்கும் வகையில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், ராம்குமாா், சுனிதா நேரு, கீா்த்தனா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் புனிதா அந்தோணியம்மாள், சுடலை மற்றும் கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

    ×