search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "graduate student"

    • சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    டி.என்.பாளையம், செப். 16-

    கோபிசெட்டி பாளையத்தை அடுத்த நாகர்பாளையம் ரோடு, கந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). பி .எஸ்.சி. பட்டதாரி. பிரகாஷ் சரியாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.


    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பிரகாசை உறவினர்கள், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர் அரசு கல்லூரியில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.
    கரூர்:

    கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (எஸ்.சி, எஸ்.டி.) மாணவ- மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. மற்ற பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பத்தினை வாங்கி சென்றனர். மாணவர் சேர்க்கை குழுவை சேர்ந்த பேராசிரியர்- பேராசிரியைகள் விண்ணப்பத்தினை வழங்கினார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    அதன் பின்னர் பட்டமேற்படிப்பு அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஜூலை 11-ந் தேதியும், அதனை தொடர்ந்து 12-ந் தேதி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு ஆகிய கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறுகிறது. பட்டமேற்படிப்புக்கான படிப்புகளில் மொத்தம் 337 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் தெரிவித்தார். 
    ×