என் மலர்
நீங்கள் தேடியது "National Voter's Day"
- ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 2 அணிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
- இதில் வெற்றி பெறும் 3 சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படும்.
தென்காசி:
13- வது தேசிய வாக்காளர் தினம் தொடர்பான (வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல்) செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, வருங்கால வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தியத் தேர்தல்கள் மற்றும் பொது அறிவு குறித்து மாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 2 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 2 அணிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறாக மொத்தம் 76 அணிகள் முதல்நிலை போட்டியில் பங்கேற்கும். முதல்நிலை, அரையிறுதி மற்றும் இறுதி நிலைப் போட்டிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக காணொலிக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் 3 சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது.
- 13-வது தேசிய வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நெல்லை:
13-வது தேசிய வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற வாசகத்தை முன்னிறுத்தி இந்த ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வாக்களிப்பது உரிமை என்பது தொடர்பான விழிப்புணர்வு கோலப் போட்டியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பலவித மான ரங்கோலி கோலங்களை வரைந்தனர்.
பேரணி
தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஆடி வாக்களிப்பதன் அவ சியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். அதன் பின்னர் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை நெல்லை மாவட்ட பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் குமார், மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலக த்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி வண்ணார் பேட்டை, முருகன்குறிச்சி வழியாக பாளையை சென்றடைந்தது. பேரணியின் போது வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகங்களை முன்னிறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
- மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி,அனைத்து துறை அலுவலர்கள் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
- ரங்கோலி போட்டியில் காசிமேஜர் ஸ்ரீ அம்மன் மகளிர் சுய உதவிக் குழு முதல் பரிசு பெற்றுள்ளனர்
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் நடைபெற்ற ரங்கோலி போட்டி, சுவர் இதழ் மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டி, பாட்டுப்போட்டி, வினாடி – வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவி – மாணவிகளுக்கு பரிசுகள், பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்கள் முதலியன வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்கான ரங்கோலி போட்டியில் மாநில அளவில் தென்காசி சட்டமன்றத் தொகுதி, தென்காசி வட்டம், காசிமேஜர் ஊராட்சி, ஸ்ரீ அம்மன் மகளிர் சுய உதவிக் குழு மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முத்துமாதவன், தனி தாசில்தார் (தேர்தல்) கிருஷ்ணவேல், தனித்துணை தாசில்தார் (தேர்தல்) பாக்கியலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- கல்லூரி முதல்வர் சின்னதாய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுரண்டை:
சுரண்டையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை மற்றும் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சந்திரவேலு, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் கண்ணன் வரவேற்று பேசினார் . சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் சின்னதாய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் வாக்குசாவடி பணியாளர்கள் வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணி வந்தனர். வி.ஏ.ஓ.க்கள் ராதாகிருஷ்ணன்,
ராஜலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன், கல்லூரி பேராசிரியர்கள் மனோரஞ்சிதம், திருநாவுக்கரசு, பிரான்ஸிஸ் ஆபிரகாம், சேர்மன், அமலா ராணி, பழனிகனி, மகாலட்சுமி, மதியழகன், சாந்தி அகடமி ரமேஷ், கிராம உதவியாளர்கள் மாரியம்மாள், கற்பகம், கலா, மங்களம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 1950 ஜனவரி 25, தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு சட்டப்படி உருவானது
- சில மாதங்களில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது
1947 ஆகஸ்ட் 15, இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரமடைந்து சுயாட்சி மிக்க தனி நாடாக உருவெடுத்தது.
1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகி பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.
1950 ஜனவரி 25 அன்று தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவானது.

1950 மார்ச் மாதம், சுகுமார் சென், இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக (CEC) பதவியேற்றார்.

ஒரு மாதத்திற்கு பிறகு பாராளுமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்" (Representation of People's Act) இயற்றியது.
இச்சட்டத்தின்படி, 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தி மக்களே பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறை விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியது.
1951 அக்டோபர் தொடங்கி 1952 பிப்ரவரி வரை முதல் மக்களவை தேர்தல் நடைபெற்றது.
2011 வருடத்தில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி 25 "தேசிய வாக்காளர் தினம்" என நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்களை பெருமளவு ஈடுபட செய்யும் விதமாகவும், வாக்குச்சீட்டின் மதிப்பை உணர்த்தும் விதமாகவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் பதிவு செய்து கொள்வதை ஊக்குவிக்கவும், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
2024 ஜூன் 16 அன்று தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைவதால், புதிய அவையின் 543 இடங்களை தேர்வு செய்ய, ஏப்ரல் மற்றும் மே மாத இடையில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போதைய இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், இதற்கான தகவலை சில தினங்களில் அறிவிப்பார்.
இந்நிலையில், தேசிய வாக்காளர் தினம் குறித்து இன்று வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், துடிப்பான ஜனநாயகத்தை கொண்டாடும் இந்நாளில், பதிவு செய்து கொள்ளாத தகுதி பெற்ற வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
- தோட்டவை விட வாக்குச் சீட்டு சக்தி வாய்ந்தது -ஆபிரகாம் லிங்கன்
- வாக்கு, ஜனநாயகத்தில் நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த வன்முறையற்ற கருவி - ஜான் லூயிஸ்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக இளைஞர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் என்பதால் ஜனவரி 25 இந்த நாளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
வலுவான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம்.
2025 தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள், 'வாக்களிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்' என்பதே ஆகும்.

வாக்குரிமை பற்றிய மேற்கோள்கள்:
தோட்டவை விட வாக்குச் சீட்டு சக்தி வாய்ந்தது - ஆபிரகாம் லிங்கன்
வாக்கு, ஜனநாயகத்தில் நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த வன்முறையற்ற கருவி - ஜான் லூயிஸ்
வாக்கு என்பது துப்பாக்கி போன்றது, ஆனால் அதை பயன்படுத்துவோரின் தன்மையைப் பொறுத்தது - தியோடர் ரூஸ்வெல்ட்
முக்கியமான விஷயங்களில் நாம் அமைதியாக இருக்கும்போது நம் வாழ்க்கை முடிந்துவிடும்- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
- ஜனநாயகத்தை நிலை நாட்ட பல பேர் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள்.
- உங்களின் வாக்கு நம் ஜனநாயகம் மற்றும் குடியரசை காக்கும்.
சென்னை:
தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ''வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்'' என்பதை மையமாக வைத்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-
நமது நாட்டில், ஜனநாயகம் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு வாக்காளர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். இன்று நகரங்களை தாண்டி கிராமங்களில் தான் வாக்கு சதவீதம் அதிகம் உள்ளது.
ஜனநாயகத்தை நிலை நாட்ட பல பேர் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள்.
பெரிய அதிகாரிகள் அனைவரும் வேலை பளுவுடன் இருப்பீர்கள், ஆனால் உங்களின் ஓய்வு நேரங்களில் தயவு செய்து ஏதாவது பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவைகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
உங்களின் வாக்கு நம் ஜனநாயகம் மற்றும் குடியரசை காக்கும்.
நிச்சயம் வாக்களியுங்கள். பலர் நோட்டாவுக்கா கவாவது ஓட்டு போடுகிறார்கள். வாக்கே செலுத்தாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும் ஒரு பங்களிப்பு தான்.
நமது தேர்தல் ஆணையம் மிகவும் அற்புதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நமது வாக்கு சதவீதத்தை எந்த நாடும் எட்ட முடியாத இடத்திலேயே உள்ளது.
யாராலும் நமது நாட்டில் நடைபெறும் ஜனநாயக முறையிலான தேர்தலை குறை கூற முடியாது.
நான் ஏன் வாக்களிக்க வேண்டுமென நினைப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் பலர் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதை தாண்டி, திசை திருப்புகிறார்கள். மின்னணு எந்திரத்தில் எந்த குறையையும் கூற முடியாது.
யாரும் அதனை நம்பி வாக்களிக்காமல் இருந்து விடக்கூடாது. தேர்தலில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள், வாக்களியுங்கள்.
பள்ளி மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், உங்கள் வீட்டில் உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை வாக்களிக்க வலியுறுத்துங்கள்.
நீங்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்ற உடன், வாக்காளர் அடையாள அட்டையை பெற்று பெருமை கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை செயலாளர் என்.முருகானந்தம், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநில தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா சாமி, மாநகராட்சி கமிஷ்னர் குமரகுருபரன், சென்னை மாவட்ட கலெக்டர் ரேஸ்மி உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






