search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eligible voters"

    • 1950 ஜனவரி 25, தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு சட்டப்படி உருவானது
    • சில மாதங்களில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது

    1947 ஆகஸ்ட் 15, இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரமடைந்து சுயாட்சி மிக்க தனி நாடாக உருவெடுத்தது.

    1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாகி பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    1950 ஜனவரி 25 அன்று தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவானது.


    1950 மார்ச் மாதம், சுகுமார் சென், இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக (CEC) பதவியேற்றார்.


    ஒரு மாதத்திற்கு பிறகு பாராளுமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்" (Representation of People's Act) இயற்றியது.

    இச்சட்டத்தின்படி, 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

    பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தி மக்களே பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறை விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியது.

    1951 அக்டோபர் தொடங்கி 1952 பிப்ரவரி வரை முதல் மக்களவை தேர்தல் நடைபெற்றது.

    2011 வருடத்தில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி 25 "தேசிய வாக்காளர் தினம்" என நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்களை பெருமளவு ஈடுபட செய்யும் விதமாகவும், வாக்குச்சீட்டின் மதிப்பை உணர்த்தும் விதமாகவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் பதிவு செய்து கொள்வதை ஊக்குவிக்கவும், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    2024 ஜூன் 16 அன்று தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைவதால், புதிய அவையின் 543 இடங்களை தேர்வு செய்ய, ஏப்ரல் மற்றும் மே மாத இடையில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.


    தற்போதைய இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், இதற்கான தகவலை சில தினங்களில் அறிவிப்பார்.

    இந்நிலையில், தேசிய வாக்காளர் தினம் குறித்து இன்று வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர், துடிப்பான ஜனநாயகத்தை கொண்டாடும் இந்நாளில், பதிவு செய்து கொள்ளாத தகுதி பெற்ற வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

    ×