search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "show"

    • பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.
    • மேலும் அதில் பங்குபெற்றவர்கள் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து 'சிறகுகள்' எனும் குழு உருவாக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தற்சார்பு வாழ்வியல் நிபுணர் பிரியதர்ஷினி மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தற்சார்பு வாழ்வியல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் நம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களான பல்பொடி, குளியல் பொடி, மூலிகை பானங்கள், மசாலா பொடிகள் போன்றவற்றை இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் அதில் பங்குபெற்றவர்கள் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து 'சிறகுகள்' எனும் குழு உருவாக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வருகின்றனர்.

    இதனிடையே சிறகுகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை யுவர் பேக்கர்ஸ் பை பேக் மூலமும் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவர் பேக்கர்ஸின் சிறகுகள் குழு மற்றும் யு கேன் பிளையுடன் இணைந்து கலாட்டா நிறுவனம் "கடந்த வந்த பாதை" எனும்‌ நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் சிறகுகள் குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் யு கேன் பிளை ஊழியர்கள் கலந்து கொண்டு இதுவரை அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்தும், யுவர் பேக்கர்ஸ் உடன் இணைந்த பிறகு அவர்கள் வாழ்வில் நடந்த மாற்றம் மற்றும் அடைந்த உயர்ந்த நிலை குறித்தும் மனம் திறந்து உரையாடினர்.

    இந்த நிகழ்ச்சியை சமூக வலைதள பிரபலம் லயா தொகுத்து வழங்கினார். இதில் யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜ், சிறகுகள் முதன்மை பயிற்சியாளர் பிரியதர்ஷினி, மேலாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் மற்றும் கலாட்டா நிறுவனம் செய்திருந்தது.

    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • துணை கலெக்டர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, இந்திய குடும்ப நலச்சங்க மதுரை கிளை ஆகியவற்றின் சார்பில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோருக்கு தீபாவளி புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    துணை கலெக்டர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜுன் குமார், மாவட்ட 'டான்சாக்ஸ்' திட்ட மேலாளர் ஜெயபாண்டி, சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் ரஞ்சித் ராம்குமார், இந்திய குடும்ப நலச்சங்க மதுரை கிளை மேலாளர் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • “ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்” என்ற நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போலீசாரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பராகவே பார்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் பணிபுரியும் போலீசார் தினந்தோறும் பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்டிகை நாளிலும் குடும்பத்துடன் செலவிட முடியாமல் பணிபுரிந்து வரும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கந்தபுனேணி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரின் ஆலோசனைபடி ஜோதி அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் விதமாக "ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்" என்ற நூதன நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை சிக்னல் அருகே தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீசார் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ், ஆட்டோ பயணிகளுக்கு லட்டுகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர், போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் பேசுகையில்:-

    காவல்துறையினரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பரா கவே பார்க்க வேண்டும், காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேணும் விதத்தில்நடத்த ப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் பொதும க்களுக்கும், காவல்துறையி னருக்குமி டையே உள்ள இடைவெளி குறையும் என்று தெரிவித்தார் .

    இனிப்புகளை பெற்றுக்கொண்ட பொது மக்கள் காவல்துறையினரின் நூதன முயற்சியை பாராட்டி னர்.

    நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கு மார், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்க ட்டளை மேலாளர் ஞானசு ந்தரி உள்ளிட்டோர் செய்தி ருந்தனர்.

    • காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கி னார். கிராம முக்கியஸ்தர்கள் செல்வராஜ், சசிகுமார், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் அந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பள்ளிக் குளத்தின் கரையில், அழிந்துவரும் பனை மரத்தினை காத்திடும் வகையில், பனை விதைகள் நட்டார். அவரைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பனை விதை களை, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் நட்டனர். கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் ரோஹன்குமார் நன்றி கூறினார்.

    • அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர்பவனி நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, அந்தோணியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார் தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. வட்டார அளவில் நடை பெற்ற இப்போட்டியில் 6 மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 7 உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 13 நடுநிலைப்பள்ளி உள்பட 26 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 51 மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு 3 பிரிவு களாவும், மாணவிகளுக்கு 3 பிரிவுகளாகவும் போட்டி நடைபெற்றது.

    இதில் தேர்வான 18 மாணவ-மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.
    • “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.

    இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-

    சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

    • தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 5-ந் தேதி நடக்கிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    பேச்சுப் போட்டி பின்வரும் தலைப்புகளில் நடத்தப்படும்.

    1. தமிழ்நாடு உரு வான வரலாறு, 2. மொழி வாரி மாகாணமும் தமிழ்நாட்டில்நடைபெற்ற போராட்டங்களும், 3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4. பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, 5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், 6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், 7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, 8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9. எல்லைப்போர்த் தியாகிகள், 10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு.

    கட்டுரை ப்போட்டிக்கான தலைப்பு "சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்" மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
    • உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பது தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் க.கணேசன் பேசியதாவது:-

    மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மளிகைக் கடைகள், உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் மந்திரமா-தந்திரமா போன்ற அறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர்.
    • விழாவின் நிறைவில் மருத்துவர் பூபேஷ்தர்மேந்திரா மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    அறிவியல்பரிசோதனைகள், காகிதக்கலை (ஒரிகாமி), அறிவியல்வி ளையா ட்டுக்கள், பாடல்கள் மற்றும் மந்திரமா?தந்திரமா? போன்றஅறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர். பேராசிரியர் சு.விழிநாதன் தலைமை வகித்தார்.

    சுபம் வித்யாமந்திர்பள்ளி தாளாளர் சுதீஷ்ஜெயின் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நந்த.ராஜேந்திரன், மாநிலசெ யலாளர் ஸ்டீபன்நாதன், முன்னாள்மாநில செயலா ளர் ப.ராயர் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டு செயல்முறை விளக்கத்துடன் மாண வர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் பெற்றோர்களும், பள்ளிஆசிரியர்களும் கலந்து க்கொண்டனர். விழாவின் நிறைவில் மருத்துவர்தர்ம. பூபேஷ்தர்மேந்திரா மாணவர்க ளுக்கு சான்றிதழ்களை வழங்கி னார். சீர்காழி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

    • மகாத்மா வித்யாலயாவில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார்.

    ஆசிரியை மாரியம்மாள் வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
    • குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குடிநீர், மின் வசதி, தற்காலிக கழிப்பறை மற்றும் சுகாதார பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும்.

    தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இைதயொட்டி மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்து வக்குழுவினர் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா, நிர்வாக உறுப்பினர்கள் செய்யது சிராஜுத்தீன், செய்யது இபுறாஹீம், சோட்டை எஸ்.பாதுஷா, ஹாஜி ஹுஸைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுறாஹிம், அமிர் ஹம்ஸா, சித்திக் லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா, லெவ்வை கனி, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் மற்றும் ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    ×