search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடந்து வந்த பாதை நிகழ்ச்சி
    X

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் கடந்து வந்த பாதை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    கடந்து வந்த பாதை நிகழ்ச்சி

    • பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.
    • மேலும் அதில் பங்குபெற்றவர்கள் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து 'சிறகுகள்' எனும் குழு உருவாக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தற்சார்பு வாழ்வியல் நிபுணர் பிரியதர்ஷினி மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தற்சார்பு வாழ்வியல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் நம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களான பல்பொடி, குளியல் பொடி, மூலிகை பானங்கள், மசாலா பொடிகள் போன்றவற்றை இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் அதில் பங்குபெற்றவர்கள் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து 'சிறகுகள்' எனும் குழு உருவாக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வருகின்றனர்.

    இதனிடையே சிறகுகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை யுவர் பேக்கர்ஸ் பை பேக் மூலமும் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவர் பேக்கர்ஸின் சிறகுகள் குழு மற்றும் யு கேன் பிளையுடன் இணைந்து கலாட்டா நிறுவனம் "கடந்த வந்த பாதை" எனும்‌ நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் சிறகுகள் குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் யு கேன் பிளை ஊழியர்கள் கலந்து கொண்டு இதுவரை அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்தும், யுவர் பேக்கர்ஸ் உடன் இணைந்த பிறகு அவர்கள் வாழ்வில் நடந்த மாற்றம் மற்றும் அடைந்த உயர்ந்த நிலை குறித்தும் மனம் திறந்து உரையாடினர்.

    இந்த நிகழ்ச்சியை சமூக வலைதள பிரபலம் லயா தொகுத்து வழங்கினார். இதில் யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜ், சிறகுகள் முதன்மை பயிற்சியாளர் பிரியதர்ஷினி, மேலாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் மற்றும் கலாட்டா நிறுவனம் செய்திருந்தது.

    Next Story
    ×