கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை

கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில்  “கல்லூரி  கனவு “ எனும்  மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட காட்சி. அருகில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், பாலசுப்பிரமணியம், சதாசிவம் மற்றும் பலர் உள்ளனர்.
விழாவில் “கல்லூரி கனவு “ எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட காட்சி. அருகில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், பாலசுப்பிரமணியம், சதாசிவம் மற்றும் பலர் உள்ளனர்.
Published on

சேலம்:

தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.

இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-

சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com