புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி

அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார்.
தேர் பவனி நடந்தது.
தேர் பவனி நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர்பவனி நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, அந்தோணியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொரூபங்களை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து வைத்தார் தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com