search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைமர விதைகள்"

    • கல்லணை கால்வாய் கரைகளில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமர விதைகள் நடும்விழா நடை பெற்றது.
    • கலெக்டர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டு 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் லயன் வெங்கடேசனின் இளைய மகள் நிர்மலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை ரெட்டிப்பாளையம், முருகன் நகரில் உள்ள கல்லணை கால்வாய் கரைகளில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமர விதைகள் நடும்விழா வசந்தம் லயன்ஸ் சங்க தலைவர் லயன் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரம் பனை விதைகள்

    நடும் விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு 1,00,00,000 பனை விதை நடுதல் திட்டத்திற்காக நமது சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 10 ஆயிரம் பனை விதைகளை பெற்றுக்கொண்டார்.

    விழாவில் வட்டார தலைவர் லயன் அன்பழகன், கிறிஸ்துமஸ் விழா மாவட்ட தலைவர் லயன் ஸ்டீபன், மண்டல ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் பால்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்) கனிமொழி, மேலவெளி ஊராட்சி தலைவர் லதா செந்தில்குமார், செயலாளர் லயன் சீனிவாசன், பொருளாளா லயன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் லயன் வடிவேலன், செயற்குழு உறுப்பினர்கள் லயன் அழகிய மணவாளன், லயன் வில்லியம் ஸ்டீபன்சன், லயன் பிரகாஷ், லயன் அப்துல்லா, லயன் உலகநாதன், லயன் ஹரி பிரசாத், ஊராட்சி நிர்வாகிகள் மற்றம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சேவைக்கு தனது ஒரு மாத ஊதியத்தை சேவை நிதியாக வழங்கிய முன்னாள் தலைவர் லயன் வெங்கடேசனின் மகள் நிர்மலாவை பாராட்டி சங்கத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    • காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கி னார். கிராம முக்கியஸ்தர்கள் செல்வராஜ், சசிகுமார், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் அந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பள்ளிக் குளத்தின் கரையில், அழிந்துவரும் பனை மரத்தினை காத்திடும் வகையில், பனை விதைகள் நட்டார். அவரைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பனை விதை களை, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் நட்டனர். கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் ரோஹன்குமார் நன்றி கூறினார்.

    ×