search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
    X

    பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

    • தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 5-ந் தேதி நடக்கிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    பேச்சுப் போட்டி பின்வரும் தலைப்புகளில் நடத்தப்படும்.

    1. தமிழ்நாடு உரு வான வரலாறு, 2. மொழி வாரி மாகாணமும் தமிழ்நாட்டில்நடைபெற்ற போராட்டங்களும், 3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4. பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, 5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், 6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், 7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, 8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9. எல்லைப்போர்த் தியாகிகள், 10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு.

    கட்டுரை ப்போட்டிக்கான தலைப்பு "சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்" மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×