search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்பாடு"

    • சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலின்றி எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி சென்னையிலிருந்து கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூ ரணி, மன்னார்குடி, நன்னி லம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளா ங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய  இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி (சனிக்கிழமை) 520 கூடுதல் பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

    கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் , தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படும்.

    இதேப்போல் கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலா டுதுறை, சீர்காழி , திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதார ண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

    மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்ப ட்டுவருகிறது.அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோ ட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, வேளாங்கண்ணி, திருவாரூர், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், கொடை க்கானல் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகை யையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணி களின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கே ற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும். மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இய க்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படு த்தப்பட்டு ள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு 300 ஆட்டோக்களில் சென்று வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டது
    • பா.ஜ.க. பொருளாளர் தொழில் அதிபர் முருகானந்தம் ஏற்பாடு

    ஆலங்குடி,

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் பாதயாத்திரை புதுக்கோட்டையில் 6-ந் தேதி நடக்கிறது. அண்ணாமலை வருகை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் வரவேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    மாவட்ட பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம் ஏற்பாட்டில் 300 ஆட்டோக்களில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.

    விஜய் பேலஸ் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம், மாவட்டப் பார்வையாளர் பழ.செல்வம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், சுந்தரவடிவேலு, நேதாஜி, சரவணன், மயில் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் புனித மண் சேகரிக்கப்பட்டது.
    • இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    விருதுநகர்

    டெல்லியில் அமிர்த வனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அங்கு கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. சார்பில் என் மண் என் தேசம் என்ற இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் விருதுநகர் காமராஜர் பிறந்த இடம், தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபம், தியாகிகள் அதிகம் வாழ்ந்த மீசலூர், எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவில், பாவாலி கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைப் போரின் போது வந்து சென்றதாக தாமிரபட்டயம் உள்ள இடம் ஆகிய பகுதிகளில் இருந்து கலசத்தில் புனித மண் சேகரிக்கப்பட்டது. இந்த மண் கலசம் ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் மண் கலசம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அங்கு பா.ஜ.க.வினர் தேச ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் வெற்றி வேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர தலைவர் நாகராஜன், பட்டியலின தலைவர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதற்கான காரணங் களை அறியும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவ லகம், ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு உதவிமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக அலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விவரங்களை அறியலாம்.

    மேலும் ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்களையும் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிகப்பட்டவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்றவர்கள் டெபிட் கார்டு மட்டுமின்றி ரூபே கார்டு மூலமாகவும் பணம் எடுக்கலாம்.

    வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றிருந்தாலும், அரசு வரவு செய்த உரிமைத்தொகையில் பணம் எடுக்கக்கூடாது.

    பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து எக்காரணம் கொண்டும் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படாது என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்து உள்ளார்.

    • அரியலூரில் பெண்கள் வங்கி கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்துள்ளது
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக கூட்டுறவு வங்கியில் முன்வைப்பு தொகை செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நாளை(24 ஆம் தேதி) தொடங்குகின்றன.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, வீடு தேடி வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதனை முகாம் நடக்கும் நாளில் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச்செல்ல வேண்டும்.இந்த திட்டத்தில் வங்கி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், அரியலூர், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை ஆகிய 9 இடங்களில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் முகாம் நடத்தப்படுகிறது. முன்வைப்பு தொகை இல்லாமல் இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

    • மகளிர் உரிமை தொகை பெற ஜீரோ பேலன்ஸில் கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கலாம்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

    பெரம்பலூர்,

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ம் தேதி தொடங்குகிறது.இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்க முடியும். இந்த உரிமை தொகை பெறுவதற்கான தகுதிகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடு க்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாட்களில் கொண்டு சென்று கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கி கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிகளை நாடி செல்கின்றனர். தற்போது வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்பு தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்று அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், அரும்பாவூர், செட்டிகுளம், குன்னம், இலப்பை குடிக்காடு, பாடலூர், துறைமங்கலம்,வி. களத்தூர்,வாலி கண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய 10 இடங்களில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணிகள் தொ டங்கப்பட்டுள்ளன.இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தகவலை கூட்டுற வுத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் நாளை (சனிக்கி ழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை தினத்தை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றை ப்பூண்டி. புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை. வேதாரண்யம், திருத்துறை ப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்க ளுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சி க்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்கள் என கூடுதலாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல நாளை மறுதினம் மற்றும் 17-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிறத்தட ங்களிலும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் 9-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் (6ந்-தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை மறுநாள் வியாழக்கிழமை (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது. பொது வாக விநாயகருக்கு அரு கம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் முப்பழ பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த இன்று (24-ந் தேதி) ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் மக்கள் சுப்பிர மணிய சுவாமி தெய்வா னையுடன் கோயிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார்.

    அங்கு கோவில் ஓதுவார் பொன்னூஞ்சல் பாடி சிறப்பு தீபாரனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முப்பழ பூஜை இன்று நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்யகிரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மா பலா வாழை என முப்பழங்கள் கொண்டு சம காலத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து மா, பலா, வாழை என முக்கனிகளை உற்சவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • மானாமதுரையில் சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    மானாமதுரை கொடிக்கால் தெருவில் உள்ள சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை நிறைவடைந்த நிலையில் சித்ராயி அம்மன் மூலவர் விமானக்கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களுக்கும் ராஜேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள எரவார்பட்டி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன், தோட்டி கருப்பச்சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மேளதாளத்துடன் பூசாரிகள் மொக்கமாயன், அழகன் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

    • கீழக்கரையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் ெதாடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த நகராட்சி கூட்டத்தில் மின்மயானம் அமைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், துணை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் மீரான் அலி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 18 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சமுதாய நிர்வாகிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அறிவித்துள்ள இந்த நல்ல திட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே சமயத்தில் கீழக்கரை இந்துக்கள் மயானம் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்றும், மின் மயானத்தை அரசுக்கு சொந்தமான வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்,இ து குறித்து மாவட்டம் நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரி வித்தனர். மக்கள் தெரிவித்த கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பதாக கீழக்கரை தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.

    ×