search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mini Marathon Competition"

    • முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பி.கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 கி.மீ தூரத்துக்கு மினி மாரத்தான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் 21 வயதிற்குட்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதுகுளத்தூர்- கடலாடி நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசும், 2-வது இடம் பிடித்தவருக்கு 5,100 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3100 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

    10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.2,100-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3- பரிசாக ரூ.1,100-ம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பூவலிங்கம் என்ற மாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசை வென்ற ஆசிப்பிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, 2-ம் பரிசை வென்ற முகம்மது யூசுப்பிற்கு பஞ்சாயத்து துணை தலைவர் புரோஸ் கான், 3-ம் பரிசை வென்ற கைப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பஹது ராஜா ஆகியோர் காசோலை வழங்கினர்.

    ஒன்றிய பற்றாளர் லதா, கவுன்சிலர்கள் மீராசா, அயூப் கான், பீர் முஹைதீன், ரஜப் நிஷா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெற உதவிய அக்பர் அம்பலம், செய்யது இபுராமுசா, ரஜபுல்லாஹ் பெரியபட்டினம் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    • செவரக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்வரசன் கோட்டை என்ற செவரக்கோட்டையில் 74-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு குரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மது, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆர்வடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றி யாளர் களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் குரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மினி மராத்தான் போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா பெற்றார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் வைத்து ஆண்களுக்கு 16 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ. என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

    பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும், இரண்டாம் பரிசு ரூ. 14 ஆயிரத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமியும் பெற்றனர்.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார், இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரத்தை அதே பள்ளியை சேர்ந்த முகேஷ், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×