மினி மாரத்தான் போட்டி

செவரக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
மினி மாரத்தான் போட்டி
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்வரசன் கோட்டை என்ற செவரக்கோட்டையில் 74-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு குரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மது, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆர்வடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றி யாளர் களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் குரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com