search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை"

    • கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    • நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
    • தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள் முயல், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரமாக கால்முறிந்த நிலையில் ஒரு ஆண் மட்ட குதிரை ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனச்சரகர் அலுவலக அயூப்கானுக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து, அந்த குதிரை பிடிக்கப்பட்டு வனத்துறையினர், கால்நடை மருத்துவர் சிவசூரியன் மற்றும் மருத்துவ குழுவினர் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த குதிரைக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து மட்ட குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குதிரை நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.

    தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.
    • அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரசிக்க வேண்டும்.

    ஒன்று கொடி மரத்தில் அமைந்திருக்கும் குதிரை.

    மற்றொன்று 18ம் படிக்கும் இடைபுறம் உள்ள ஆலய மணி.

    ஆதியில் சபரிமலையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது.

    1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

    அதன் பினனர் அந்த சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர்.

    18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும்.

    அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச்சிலை.

    • குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
    • கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.

    உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர்.
    • திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் மணல்பரப்பில் குதிரை சவாரி செய்வதற்கு பலரும் விரும்புகிறார்கள்.

    அந்த வகையில் பெங்களூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தனர். அப்போது அவர்கள் குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குதிரை எதிர்பாராதவிதமாக எட்டி உதைத்தது. இதில் எபிநேசர் என்ற சிறுவனின் முகத்தில் உதை விழுந்தது. அவனது மூக்கு மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குதிரை ஓட்டியான அசோக்கை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.

    • மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
    • 2,3 -ம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் 43-ம் ஆண்டு, நாராயணசாமி 10-ம் ஆண்டு நினைவையொட்டி மாடு, குதிரை எல்கை பந்தயம் காணும் பொங்கல் விழாவில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார்.

    செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த விஜயகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்று பேசினார்.

    விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு மாடு மற்றும் குதிரை எல்கை பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து போட்டி அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை நடைபெற்றது. மாட்டிற்கான எல்கை பந்தயம் 6கி.மீ தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரைக்கான எல்கை பந்தையம் 8கி.மீ தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது.

    சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் அவைகள் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

    போட்டியில் வெற்றிப்பெற்ற சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நினைவு பரிசுகள் வெற்றிப்பெற்ற மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கும் பல்வேறு பரிசுகள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு, குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.

    பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். நிறைவாக பந்தயக்குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்படவே ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார்.
    • ெபரியநாயக்கன் பாளையத்தை அடுத்த கோக்கரையான் மலை பகுதிக்கு குதிரையுடன் சென்றார்.

    கவுண்டம்பாளையம்

    கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

    பின்னர் இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் ெபரியநாயக்கன் பாளையத்தை அடுத்த கோக்கரையான் மலை பகுதிக்கு குதிரையுடன் சென்றார்.

    அங்கு குட்டையில் குதிரையை குளிக்க வைத்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார். ஸ்ரீசாந்த் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் குதித்து ஸ்ரீசாந்தை மீட்டனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
    • குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குடிநீர், மின் வசதி, தற்காலிக கழிப்பறை மற்றும் சுகாதார பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும்.

    தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இைதயொட்டி மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்து வக்குழுவினர் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா, நிர்வாக உறுப்பினர்கள் செய்யது சிராஜுத்தீன், செய்யது இபுறாஹீம், சோட்டை எஸ்.பாதுஷா, ஹாஜி ஹுஸைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுறாஹிம், அமிர் ஹம்ஸா, சித்திக் லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா, லெவ்வை கனி, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் மற்றும் ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    ×