search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DRINKING WATER TANK"

    • மருதநத்தம் கிராமத்தில் குடிநீர் தொட்டியை சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள மருதநத்தம் கிராமத்தில் ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நாட்டார்மங்கலம் அம்மன் கோவில்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இதில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் காசிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பகவல்லி, சீனிவாசன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ., கிராம பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

    • 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
    • 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சிப்பகுதியில் சாலையை மறைத்து கட்டப்பட உள்ள மேல்நிலை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

    கருவலூர் ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.அது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அத்தொட்டி அகற்றப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அதே இடத்தில் 60 ஆயிரம் லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.பொதுமக்கள் இது குறித்து கேட்டால்முறையாக பதில் தருவதில்லை.

    எனவே அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மேல்நிலை தொட்டி கட்டுவதை மாற்றி அண்ணா நகர் தெற்கு பகுதியில் புதிதாக உள்ள காலி இடத்தில் இந்த மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
    • கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.

    உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன.
    • 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள திருவடிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குடிவனம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இப்பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக கிணற்றின் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

    கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்குள்ள குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புலிக்குடிவனம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்ற 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் திருவடிசூலம் ஊராட்சியில் புலிக்குடிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பழுதடைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் பஞ்சாயத்து உள்ளது/ இதன் தலைவராக சியாமளா சுரேந்தர் உள்ளார். இந்த பஞ்சாயத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சியாமளா சுரேந்தர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி டெண்டர் விடப்பட்டதாக கூறி பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26-ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையை தொடர்ந்து, இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

    • புதிய கட்டிட பணிக்காக ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாற்று வேலைக்காக குடிநீர் குழாய் சின்டெக்ஸ் உடைக்கப்பட்டது.

    இக்கோவிலில் பக்தர்க ளுக்காக சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்ப டுத்திய பா.ஜ.க. விவசாய அணியின் மாநில துணைத்தலைவர் மணி முத்தையா கூறியதாவது:-

    ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் குளிப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர்.

    இப்பகுதி பக்தர்களுடைய வேண்டு கோளை ஏற்று பக்தர்கள் வசதிக்காக எனது சொந்த செலவில் திருப்பணியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைப்பு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துக் கொடுத்தேன்.

    இந்த தண்ணீர் தொட்டி மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி வநதனர்.

    தற்போது அதனை நிர்வாகம் இடித்து சேதப்படுத்தியுள்ளது.இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் இளமதி கூறும்போது, நாங்கள் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தவில்லை. இந்த தொட்டியை அன்னதான மண்டபத்தின் அருகில் விரிவாக கட்டப்போகி றோம். இந்த இடத்தில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு பணி ஆணையும் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.

    • திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே காவிரி குடிநீர் குழாய் தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தியாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் ஜெம்புநாதபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து நீரேற்று நிலையம் மூலம் மேட்டுப்பாளையம் சென்று பின்னர் தா.பேட்டை பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பேரூராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆணைக்கிணங்க முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் பரிந்துரையின் பேரில் ரூ.20 லட்சம் மதிப்பில் தா.பேட்டையில் காவேரி குடிநீருக்காக புதிதாக தரைமட்ட நீர் தேக்க தொட்டி (சம்ப்) அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தரைமட்ட குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், பேரூராட்சி துணைத்தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் இத்திட்டம் குறித்து வாழ்த்தி பேசினர்.

    விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர் சேகரன், கே.பெரியசாமி, நகர செயலாளர் தக்காளி தங்கராசு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நிர்வாகிகள் பிரபாகரன், அரவன், கருணாநிதி, மகாமுனி, ராஜசேகரன், ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக தா.பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து என்.கருப்பம்பட்டி கொட்டம் பகுதிக்கு செல்லும் புதியசாலை சீரமைப்பு பணியையும் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களின் நீண்ட கால கேளிக்கையை நிறைவேற்ற பெரும் முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    ×