என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பண்ருட்டி யூனியன் அலுவலகத்தில் பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணா
- ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
- பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மணப்பாக்கம் பஞ்சாயத்து உள்ளது/ இதன் தலைவராக சியாமளா சுரேந்தர் உள்ளார். இந்த பஞ்சாயத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சியாமளா சுரேந்தர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி டெண்டர் விடப்பட்டதாக கூறி பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்.
Next Story