உடுமலையில் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரை உயிருடன் மீட்பு

குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 ராட்சத கயிறு மூலம் தீயணைப்பு வீரர்கள் குதிரை மீட்கப்பட காட்சி.
 ராட்சத கயிறு மூலம் தீயணைப்பு வீரர்கள் குதிரை மீட்கப்பட காட்சி.
Published on

உடுமலை :

உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.

உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com